Breaking News

நீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி உள்துறை அமைச்சகம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் என்.ஐ.ஏ விற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடிதம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிரான  அரசு தரப்பு ஆதாரங்கள் என்று கூறிக்கொண்டு ஊடகங்களில் ஒரு பிரிவினர் திட்டமிட்டு செய்து வரும் பொய் பிரச்சாரம் தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்கக்கோரியும், இயக்கத்துடைய பணிகளை முடக்குவதற்காக மேற்கொள்ளப்படும் சதித்திட்டங்கள்  மீது நீதியான முறையில் விசாரணை நடத்தி இயக்கத்தின் மீதான போலியான குற்றச்சாட்டுகளை திரும்பப்பெறக்கோரியும் உள்துறை அமைச்சகம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA)விடம் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் E. அபுபக்கர் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் இயக்கத்திற்கு எதிரான சதி வேலை குறித்த தனது கவலையை அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில் “இயக்கத்தின் பணிகளை முடக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடன் சில சக்திகள் எங்களுக்கு எதிராக அச்சம் மற்றும் சந்தேகத்திற்குரிய சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்” என்றும் கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சகத்திடம்  சமர்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற NIA கோப்புகளில் இயக்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் இந்த கடிதம் மறுத்துள்ளதுடன் ஊடகங்களில் வெளிவரும் சமீபத்திய அறிக்கைகள், இயக்கத்துடைய பெயரை பொதுமக்களுக்கு மத்தியில் களங்கப்படுத்துவதற்காக செய்யப்பட்டு வரும் அவதூறு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

சுகாதார விழிப்புணர்வு மற்றும் கல்வி உதவி போன்ற சேவைகளை ஊக்குவித்து ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை சக்திபடுத்துவதன் மூலமாக தேசத்தை கட்டமைக்க பல்லாயிரக்கணக்கான  துடிப்பான உறுப்பினர்களையும் இலட்சக்கணக்கான ஆதரவாளர்களையும் தேசத்திற்கு அர்ப்பணித்து வரும் தேசிய இயக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், உளவு நிறுவனங்கள் பாரபட்சமற்ற முறையில் நடந்து கொள்ளவும், நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், இத்தகைய விஷயங்களை கவனித்து நேரடி விசாரணையை மேற்கொள்ள வேண்டும்” என்று அந்த கடிதத்தில் உள்துறை அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

இயக்கத்தின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் தெளிவுபடுத்தல்களை வழங்குவதற்காக அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் முயற்சிகளையும் இயக்கம் முன்னெடுத்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படிக்கு

M. முஹம்மது அலி ஜின்னா, 
தேசிய பொதுச்செயலாளர், 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *