Breaking News

ஹஜ் அரசியலாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட்

ஹஜ் மானியம் விவகாரம் தொடர்பாக நடக்கும் விவாதங்கள், மக்களுடைய  மத உணர்வுகளை அரசியல் ரீதியாக பயன்படுத்தும் ஒரு ஏமாற்று வித்தையே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர்  E.அபுபக்கர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

ஒரு முஸ்லிமுக்கு ஹஜ் என்பது தெளிவான ஒன்று.இது ஒன்றும் நிதி உதவி செய்து பூர்த்தி செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல. உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தகுதியுடைவர் மீது கடமையாக்கப்பட்ட ஹஜ் நடைமுறையின் அடிப்படை கோட்பாடுகளை புரிந்து கொள்வதில் ஹஜ் மானியக் கொள்கை தோற்றுவிட்டது. அரசுகள் பல காலமாக, அரசியல் வாக்குறுதியாகவும் அல்லது ஹஜ் மானியத்தை நீக்கிவிடுவதாக அச்சுறுத்தியும் மக்கள் மத்தியில் அரசியல் ஆதாயத்திற்காக ஹஜ் மானியத்தை பயன்படுத்தி வருகிறது. புதிய ஹஜ் கொள்கைக்கு பின்னால் உள்ள நோக்கமும் இதிலிருந்து வேறுபட்டதல்ல.

ஹஜ் மானியத்தை திரும்பப் பெறும் மத்திய அரசின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். மேலும், அனைத்து விதமான யாத்திரைகளுக்கும் மத பயணங்களுக்கும் வழங்கப்படும் மானியங்களை திரும்பப் பெறுமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். இது தான் அரசியலமைப்பில் செழுமைப்படுத்தப்பட்டுள்ள மதச்சார்பற்ற தன்மையின் உண்மையான நோக்கமாகும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இப்படிக்கு, 

ஷஃபீகுர் ரஹ்மான், 
மக்கள் தொடர்பு செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தலைமையகம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *