Breaking News

பூதாகரமாக சித்தரிப்பது ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் : பாப்புலர் ஃப்ரண்ட்

புது தில்லி: சங்பரிவாருடைய ஃபாஸிச சித்தாந்தத்திற்கு எதிராக உறுதியான நிலைப்பாடு எடுத்து வருவதாலும் அரசாங்கத்தின் தோல்விகளுக்கு எதிராகப் பேசி வருவதாலும், பாப்புலர் ஃப்ரண்ட்-ஐ ஒடுக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கோழிகோட்டில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக குழு கூட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தலைவர் E.அபுபக்கர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சில நிறுவனங்களை பயன்படுத்தி இயக்கத்தின் பிம்பத்தை களங்கப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கசிந்த NIA அறிக்கைகள் என்று கூறப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் தீவிரவாத முத்திரையிடும் இந்த சதிவேலையை ஊடங்களில் சில பிரிவினர் மிக ஆர்வமாக மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் வரவிருக்கும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்த மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்கும் இத்தகைய இழிவுபடுத்தும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

கூறப்படுகின்ற NIA அறிக்கையில் கேரளாவில் மூவாட்டுப்புழா மற்றும் நாராத்தில் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு சம்பவங்களையும் தீவிரவாத செயல்கள் என்று குறிப்பிட முடியாது. பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கமாகவோ அல்லது அதன் தலைவர்களோ இதில் ஈடுபடவில்லை என்று விசாரணை நீதிமன்றம் மூவாத்துப்புழா வழக்கில் கூறியுள்ளது. மற்றொரு வழக்கில் UAPA பிரிவுகளை கேரளா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் கேரள உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதற்கான NIAவின் முறையீடுகளையும் உச்சநீதிமன்றம் ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டது.

SIMI-ன் மறுசீரமைப்பு என்ற அபத்தமான கோட்பாடு கடந்த காலங்களில் மறுக்கப்பட்டுள்ளது. 2001ல் SIMI தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பாப்புலர் ஃப்ரண்ட்-ன் முன்னோடியான நேஷனல் டெவலப்மென்ட் ஃப்ரண்ட் (NDF) 1993-ல் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு திறந்த புத்தகம், ஊடகங்களால் பூசி மெழுகப்படும் குற்றச்சாட்டுகள் மிகவும் பழமையானவை கடந்த காலங்களில் ஆதாரமற்றவை என்று நிரூபிக்கப்பட்டவை. கட்டாய மதமாற்றம் மூலமாக பாதிக்கப்பட்டவர்களால் வெளிச்சத்திற்கு வந்துள்ள ஹிந்துத்துவ குண்டர்களுடைய வெறுப்பு சம்பவங்களை மூடி மறைப்பதற்காகவும், பணமதிப்பிழப்பு சாகசங்கள் உட்பட ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ள அரசுடைய தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும் இத்தகைய முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களை நேரடியாக சந்திப்பதன் மூலமாகவும், ஜனநாயக மற்றும் சட்ட வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலமாகவும் இத்தகைய ஒடுக்குமுறைகளையும், அவதூறு பிரச்சாரங்களையும் பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து எதிர் கொள்ளும்.

இப்படிக்கு

ஷஃபீகுர் ரஹ்மான்,
மக்கள் தொடர்பு செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *