Breaking News

திருச்சியில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டுத்துறையின் தகவல் மற்றும் சேவை மையம் திறப்பு விழா நிகழ்ச்சி!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக தகவல் மற்றும் சேவை மையம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (20.09.2017) திருச்சி பாலக்கரையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட தலைவர் S.அமீர் பாஷா அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் A.முஹம்மது சித்திக் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் I.சபியுல்லா, வயலூர் ரோடு அத்-தக்வா பள்ளிவாசல் தலைமை இமாம் N.அலி அக்பர் உமரி, Dr. M.A. சுக்கூர், M.B.B.S., மற்றும் லாரி, பஸ் உதிரிபாகங்கள் சங்க தலைவர் K.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் S. அஹமது நவவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பாப்புலர் ஃப்ரண்ட்- ன் சமூக மேம்பாட்டுத்துறை பணிகள் குறித்து உரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாட்டுத்துறையின் தகவல் மற்றும் சேவை மையத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், பல்வேறு துறை சார்ந்த முக்கியஸ்தர்கள், ஜமாஅத்தார்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

  Community Centre Opening @ Trichy (1) Community Centre Opening @ Trichy (4)Community Centre Opening @ Trichy (2) Community Centre Opening @ Trichy (3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *