Breaking News

உரிமை முழக்க மாநாட்டை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற அக்டோபர் மாதம் 7-ம் தேதி மதுரையிலும் 8-ம் தேதி சென்னையிலும் உரிமை முழக்க மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு இன்று (20 செப்டம்பர் 2017) காலை 11 மணியளவில் திருச்சி பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் A. ஹாலித் முஹம்மது அவர்கள் கலந்துகொண்டு மாநாட்டிற்கு அழைப்பு கொடுத்தார். மேலும் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட தலைவர் அமீர் பாஷா, மாவட்ட செயலாளர் முஹம்மது சித்திக், மாவட்ட மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்சல் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Press Meet @ Trichy (1) Press Meet @ Trichy (2)Press Meet @ Trichy (3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *