Breaking News

கமருள் இஸ்லாமுடைய மரணம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : பாப்புலர் ஃப்ரண்ட்

கர்நாடகாவை சார்ந்த முஸ்லிம் தலைவரான கமருள் இஸ்லாமுடைய மறைவுக்கு பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் E.அபுபக்கர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த பகுதியை சார்ந்த முஸ்லிம் சமூகத்திலுள்ள அனுபவமும் கருணையுமிக்க ஒரு தலைவருக்கான வெற்றிடத்தை கமருள் இஸ்லாமுடைய மரணம் உருவாக்கியுள்ளது என்று E.அபுபக்கர் கூறியுள்ளார். அவரது சமூக மக்கள் மீது அவர் பெரிதும் அக்கறை உடையவராக இருந்தார். முஸ்லிம் லீக் மூலமாக அரசியலில் நுழைந்த அவர் காங்கிரஸ் கட்சின் வலுவான ஒரு தலைவராக உருவெடுத்தார். அவர் தற்போது காங்கிரஸ் MLAவாக இருந்தார். மேலும், அவருடைய மரணம் வரை கல்புராகியில் வெல்ல முடியாத அரசியல்வாதியாக இருந்தார். அவர் மக்களிடமிருந்து சற்றும் குறையாத ஆதரவை பெற்று வந்தார். இதுவே அவர் மீது மக்கள் எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தனர் என்பதற்கு போதுமான சான்றாக உள்ளது. ஆறு முறை MLAவாகவும், காங்கிரஸ் அரசாங்கத்தில் ஒரு முறை அமைச்சராகவும் ஒரு முறை  MPயாகவும் இருந்த கமருள் இஸ்லாம் நெருக்கடியான நேரங்களில் சமூகத்தை கண்ணியமாகவும் நேர்த்தியாகவும் வழி நடத்தினார். அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் மற்றும் அகில இந்திய மில்லி கவுன்சிலுடைய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதுடன் அனைவரையும் ஊக்குவித்து வந்தார். அத்தகைய சந்தர்ப்பங்களில், அவருடைய நட்பையும், அன்பையும் பெறக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது, அதை நான் கௌரவமாக கருதுகிறேன். அவருடைய மறுமை வாழ்க்கையில் அல்லாஹ் அவருக்கு பாவமன்னிப்பு வழங்குவானாக என்று பிரார்த்திக்கக்கூடிய அதே சமயத்தில் துக்கத்திலிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சமூகத்து மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு 

ஷஃபீகுர் ரஹ்மான்,
மக்கள் தொடர்பு செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *