Breaking News

அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணைத்தலைவர் நேரில் ஆறுதல்!

அண்மையில் நீட் தேர்வு விவகாரத்தில் மரணமடைந்த அரியலூர் மாணவி அனிதாவின் இல்லத்திற்கு 13.09.2017 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் நேரில் சென்று அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது அவர் குடும்பத்தினர்; மாணவி அனிதாவின் கல்வி மீதான பிரியம், சமூக சிந்தனை, துடிப்பான போராட்ட குணம் என எண்ணற்ற விஷயங்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளிடம் எடுத்துக்கூறினர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணைத்தலைவர் எந்த இலட்சியத்திற்காக மாணவி அனிதா உயிர் நீத்தாரோ அந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் துவக்கத்தில் இருந்தே கூறி போராடி வருகிறது. இனியும் தொடர் போராட்ட களத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மாணவர்களுக்கு உறுதுனையாக நிற்கும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட தலைவர் அமீர் பாஷா, மாவட்ட செயலாளர் முஹம்மது சித்திக், மாவட்ட மக்கள் தொடர்பு தொடர்பு ஒருங்கிணைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

Anitha Home Visit (5) Anitha Home Visit (3) Anitha Home Visit (1)Anitha Home Visit (4) Anitha Home Visit (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *