Breaking News

அநீதிக்கு எதிராக உறுதியுடன் களம் காண இத் தியாகத் திருநாளில் உறுதி ஏற்போம் : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் வாழ்த்து செய்தி!

தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாகத் திகழும் ஹஜ்ஜூப் பெருநாள் எனும் தியாகத் திருநாள் மக்களிடையே சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தட்டும். அத்துடன் அநீதிக்கு எதிராக களம் காண இந்நன்னாளில் நாம் உறுதி ஏற்போம்.

தியாகத்தின் திருவுருவமாய் திகழ்ந்து அர்ப்பணிப்பிற்கு ஒப்பில்லாத உதாரணமாகத் திகழ்ந்தவர் இறைத்தூதர் இப்ராஹிம்(அலை). பெற்றெடுத்த தந்தையும் அதிகாரம் நிறைந்த கொடுங்கோல் ஆட்சியாளனும் அசத்தியத்தின் பக்கம் நின்றாலும் அதனை தீர்க்கமாக எதிர்க்க வேண்டும் என்ற நன்னெறி பாடத்தை கற்றுத் தந்தவர் இறைத்தூதர் இப்ராஹிம்(அலை). சத்தியத்திற்கான இந்த நீதிநெறி போராட்டப் பாதை சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டதல்ல, மாறாக கற்களும் முட்களும் நிறைந்தது என்பதையும் உணர்த்தி செயல்படுத்திக் காட்டியவர். தனது இலட்சியப் போராட்டத்தின் உச்சகட்டமாக, தனது ஆருயிர் மகனையே தியாகம் செய்ய முன்வந்த தியாகச் சீலர் அவர்.

இந்த கொள்கைக் குன்றின் தியாகத்தின் நினைவாக கொண்டாடப்படும் ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தை நமது தியாக உணர்வுகளை புதுப்பித்துக் கொள்ள நாம் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும். அசத்தியத்தின் இருள் சூழ்ந்து அநீதிகள் மண்டியிட்டு கிடக்கும் இத்தருணத்தில் அநீதிக்கு எதிராக உறுதியுடன் களம் காண இந் நன்னாளில் நாம் உறுதி எடுக்க வேண்டும். தியாகத் திருநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப்படிக்கு 

எம். முஹம்மது இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *