Breaking News

பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களின் மத கடமையான குர்பானியை தடுத்திடும் சங்பரிவார பாசிஸ்டுகளை எதிர் கொள்வோம்! பாப்புலர் ஃப்ரண்ட் மக்களுக்கு அழைப்பு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலக குழு கூட்டம் 14-08-2017 அன்று மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரும் தங்களுடைய மத சடங்குகளை சுதந்திரமாக நிறைவேற்றும் உரிமையை அரசியல் அமைப்பு சாசன சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் வழங்கியுள்ளது. இதன் படி அனைத்து மத வழிபாடுகளும் எந்த இடையூறும் இல்லாமல் தேசம் முழுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றது. சமீப காலமாக சிறுபான்மையின சமூகங்கள் கொண்டாடும் விழாக்களுக்கு பல்வேறு விதமான நெருக்கடிகளை மோடியின் மத்திய அரசும், பா.ஜ.க ஆளும் மாநில அரசுகளும், சங்பரிவார பாசிஸ அமைப்புகளும் ஏற்படுத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கும், மாடு விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்திலும், முஸ்லிம்கள் கொண்டாடும் குர்பானி பெருநாளில் மாடுகள் அறுக்க தடைவிதிக்கும் நோக்கத்திலும் இறைச்சிக்காக மாடுகள் விற்கக்கூடாது என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு தேசம் முழுவதும் கடும் எதிர்ப்பு வந்ததை அடுத்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் இந்தியாவில் மாடுகளை இறைச்சிக்காக அறுக்க எந்த தடையும் இல்லை. எனவே, முஸ்லிம் சமூகம் எந்த விதமான அச்சமும் இல்லாமல் தங்களுடைய குர்பானி கடமையை நிறைவு செய்திடலாம்.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் நிறைவேற்றும் குர்பானி கடமையை சங்பரிவார பாசிஸ்டுகள் தடுக்க முயற்சித்தால் அதனை துணிச்சலுடன் எதிர் கொண்டிட வேண்டும் என மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், குர்பானி கடமையை நிறைவு செய்ய அனைத்து ரீதியிலும் பாப்புலர் ஃப்ரண்ட்- ன் அனைத்து செயல்வீரர்களும் அவர்களுக்கு துணை நின்று உதவிகள் செய்திட வேண்டும் எனவும் மாநில செயலக குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்செயலக கூட்டத்தில் மாநில பொது செயலாளர் A.ஹாலித் முஹம்மது, துணை தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி, செயலாளர்கள் A.முஹைதீன் அப்துல் காதர் மற்றும் A.முஹம்மது பயாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு

A. ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *