Breaking News

நாட்டை ஆள்பவர்களை விட நமது ஜனநாயகம் வலிமையானது : பேரா. பி.கோயா

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைமையகத்தில் 15.08.2017 அன்று தேசிய கொடியை ஏற்றிய பிறகு அதன் தேசிய செயற்குழு உறுப்பினர் பேரா. பி. கோயா உரையாற்றினார். நமது நாட்டின் சுதந்திரத்தின் 71வது ஆண்டை கொண்டாடும் இத்தருணம் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

துரதிருஷ்டவசமாக, இது வலி மற்றும் வேதனையின் தருணமாகவும் இருக்கிறது. ஏனென்றால் கோரக்பூர் மருத்துவமனையில் 60ற்கும் மேற்பட்ட குழந்தைகள் சுவாசத்திற்காக தத்தளித்து மரணித்துள்ளனர். தற்போது நாட்டை ஆட்சி செய்யும் வகுப்புவாத, பாசிச சக்திகளுக்கு எதிராக நாம் நிற்காதவரை எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் தொடரும் என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம். ஆனால், நமது நாட்டை ஆட்சி செய்பவர்களை விட நமது ஜனநாயகம் வலிமையானது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

பிரதமர் நரேந்திர மோடியோ பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவோ அல்லது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தோ நமது நாட்டை கட்டுப்படுத்துபவர்கள் கிடையாது, நமது ஜனநாயகத்தின் விதியை தீர்மானிப்பவர்களும் கிடையாது.

எனவே, நம்பிக்கை மற்றும் தீரத்துடன் நமது வலிமையான ஜனநாயகத்தின் எதிர்காலம் மற்றும் அபிவிருத்தியை பாதுகாக்க நம்பிக்கையோடு நாம் உரக்க கூறுகிறோம் “இந்தியா நீடுழி வாழ்க, ஜனநாயகம் நீடுழி வாழ்க”. நீங்களும் இதனை திரும்ப கூறுங்கள். இந்த அற்புதமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

வடக்கு மண்டல செயலாளர் அனிஸ் அன்சாரியும் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். தேசிய செயற்குழு உறுப்பினரும் வடக்கு மண்டல தலைவருமான ஏ.எஸ்.இஸ்மாயில், தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகம்மது யூசுப், வடக்கு மண்டல செயலாளர் சஃபியுல்லாஹ், டெல்லி மாநில செயலாளர் குல்ஃபாம் ஹூஸைன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தலைமையக செயலாளர் நபீல் அனைவரையும் வரவேற்றார். மக்கள் தொடர்புத் துறை செயலாளர் ஷஃபீக் ரஹ்மான் நன்றியுரையாற்றினார்.

Independence Day Celebration @ Delhi HO (2)Independence Day Celebration @ Delhi HO (3) Independence Day Celebration @ Delhi HO (1)

 

இப்படிக்கு

ஷஃபீகுர் ரஹ்மான்,
மக்கள் தொடர்பு செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *