Breaking News

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் நடைபெற்ற சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் பங்கேற்பு!

71 வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி 15-08-2017 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நாங்குனேரி டிவிசன் தலைவர் அன்வர் முஹைதீன் அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் அஹமது நவவி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இறுதியாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Independence Day Celebration @ Ervadi (1)Independence Day Celebration @ Ervadi (2) Independence Day Celebration @ Ervadi (3)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *