Breaking News

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி!

சென்னை : 71 வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி 15-08-2017 அன்று சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன் அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் M. முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமை நிலைய செயாலாளர் அப்துல் ரஜாக் அவர்கள் சுதந்திர தின உறுதிமொழியை முன்மொழிய பொதுமக்கள் அனைவரும் சுதந்திரத்தை பேணிப்பாதுகாக்க உறுதிமொழி எடுத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இறுதியாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

 

Independence Day Celebration @ Head Office (1) Independence Day Celebration @ Head Office (2) Independence Day Celebration @ Head Office (3) Independence Day Celebration @ Head Office (4)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *