Breaking News

பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.உதய சந்திரன் அவர்களின் பணிமாற்றம் தவிர்க்கப்பட வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்!

கடந்த மார்ச் மாதம் உதய சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். இதனால் பள்ளி கல்வித்துறை சம்மந்தமாக பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். அவர் பதவி வகித்தபோது குறிப்பாக கல்வி சாலையின் தரங்களை உயர்த்தினார். தமிழகத்தின் 100 உயர்நிலை பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், 150 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில் உதய சந்திரன் அவர்கள் பணி மாற்றம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


உதய சந்திரன் கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட பின் கல்வித்துறை வெளிப்படையாக செயல்பட்டதாக கூறப்படுகின்றது. அவர் ஆளும் அரசின் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்காமல் தேவையற்ற ஆசிரியர் பணி இடமாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.  இவரின் வெளிப்படையான செயல்பாடு, ஊழலற்ற செயல்பாடுகள் போன்றவைகள் தான் உதய சந்திரனின்  பணிமாற்றத்திற்கான காரணம் என்றும் கூறப்படுகின்றது. கல்வித்துறையில் பல நல்ல மாற்றங்களையும், வெளிப்படை தன்மையையும் கொண்டுவந்த உதய சந்திரன் அவர்களின் பணிமாற்றம் கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் வளர்ச்சியும், எதிர்காலமும் கல்வித்துறையின் கைகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐந்து மாதங்களே ஆன நிலையில் அரசியல் காரணங்களுக்காக பணிமாற்றம் செய்வதினால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதினை மாநில அரசு கவனத்தில் கொண்டு உதய சந்திரன் அவர்களின் பணிமாற்ற எண்ணத்தை கைவிட வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கின்றது.

 

இப்படிக்கு

எம். முஹம்மது இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *