Breaking News

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டிற்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் லீகல் நோட்டீஸ்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஒளிபரப்பிய டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜூன் 23 அன்று “அப்ஃப்ரண்ட் இந்தியா: ஒரு மாநிலத்தில் மத மாற்ற  தொழிற்சாலை வளர்ச்சி அடைய எவ்வாறு அனுமதிக்கப்பட்டது” என்ற தலைப்பில் டைம்ஸ் நவ் தனது பிரைம் டைம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இணையதளத்திலும் செய்தி அறிக்கை ஒன்றை ஒளிபரப்பியது.
 

மத மாற்றத்தை குறித்து பேசும் இந்த செய்தி அறிக்கை, போலியான ஆவணங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய போலியான, ஆதாரமற்ற ஆவணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையோடு பாப்புலர் ஃப்ரண்டை  அந்த செய்தி நிறுவனம் தொடர்புபடுத்தியுள்ளது. இந்த சேனலின் செய்தி அறிக்கைகளில் விளம்பரத்துக்காக இத்தகைய போலியான  மத மாற்ற ஆவணங்கள் இடம் பெருவது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2011ம் ஆண்டு முதல் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக இத்தகைய செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு,   இது போன்று புனையப்பட்ட விளம்பரங்களை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் காவல்துறையில் பல முறை புகார் செய்துள்ளது. டைம்ஸ் நவ் நடத்தும் பிரைம் டைம்  என்ற முழு நிகழ்ச்சியும் பொய் மற்றும் புனையப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலானது. அத்தகைய ஆவணங்களின் நம்பகத் தன்மையை சரி பார்க்கும் அடிப்படை கடமையை கூட அந்த செய்தி நிறுவனம் புறக்கணித்துள்ளது.
 
குற்றசாட்டுகளை திரும்ப பெறுவது சம்பந்தமாக அனுப்பப்பட்ட மறுப்பு செய்திக்கும் அந்த சேனலிடமிருந்து எந்த பதிலும் இல்லை. எனவே,  பதினைந்து நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்பதற்கான லீகல் நோட்டீஸ், டைம்ஸ் நவ் சேனலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்கனவே இது போன்ற போலியான செய்திகளை பதிவு செய்த பத்து பத்திரிகைகளுக்கு எதிராக புகார் அளித்திருக்கிறது.  அந்த பத்திரிக்கைகளை  பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா கண்டித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்படிக்கு
 
ஷஃபீகுர் ரஹ்மான்,
மக்கள் தொடர்பு செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *