Breaking News

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

பசு குண்டர்களை பாதுகாக்க அப்பாவி முஸ்லிம்களை அச்சுறுத்தி வரம்புமீறி பொய் வழக்கு போட்டு கைது செய்யும் காவல்துறையை கண்டித்து சென்னை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இன்று (28.07.2017) வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் எழும்பூர் தொகுதி தலைவர் J. முஹம்மது நாஜிம் அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் S.அஹமது நவவி, SDPI கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அப்பாவி முஸ்லிம்களை அச்சுறுத்தி வரம்புமீறி பொய் வழக்கு போட்டு கைது செய்யும் காவல்துறையை கண்டித்து கண்டன கோஷமிட்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

 

1 2 3 4 5 6 7 8 9 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *