Breaking News

பசு குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களுடன் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் E.அபூபக்கர் தலைமையிலான தேசிய குழு சந்திப்பு!

பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் இருக்கும் வெறித்தனமான கும்பலுடைய தாக்குதலுக்கு பலியாகி அல்லது கடுமையான காயங்களுக்கு உள்ளாகி வரும் ஜார்க்கண்ட், ஹரியானா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் குக்கிராமங்களை சேர்ந்த குடும்பங்களை சந்திக்கக்கூடிய  சுற்றுப்பயணத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E. அபூபக்கர் தலைமையிலான பிரதிநிதிகள் குழு மேற்கொண்டது. எஸ்.டி.பி.ஐ தேசிய பொதுச்செயலாளர் இல்யாஸ் முஹம்மது தும்பே மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் அப்துல் வாஹித் சேட் ஆகியோர் உள்ளடங்கிய பிரதிநிதிகள் குழு, பல்வேறு இடங்களில் மேற்கொண்ட சந்திப்பில் இயக்கத்தின் மண்டல மற்றும் உள்ளூர் தலைவர்களும் உடன் சேர்ந்து கொண்டனர். முஸ்லிம் மற்றும் தலித்துகள் அடித்து படுகொலை செய்யப்பட்ட  இடங்களுக்கு சென்ற போது, படுகொலைகளிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களையும் அக்கம் பக்கத்திலுள்ள உள்ளூர் மக்களையும் நீதிக்காக போராடுமாறும்; இழப்பீடு என்ற வடிவில் வரும் சலுகைகளை கொண்டு மனதிருப்தி அடைந்து விட வேண்டாம் என்றும் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் அறிவுறுத்தியுள்ளார்

ஜூலை 17ம் தேதி, 5000க்கும் அதிகமான நபர்கள் அடங்கிய கும்பலால் அடித்து படுகொலை செய்யப்பட்ட ஜாம்ஷெட்பூர் அருகே உள்ள ஹல்டிபுகார் கிராமத்தை சேர்ந்த ஷேக் ஹலீமுடைய குடும்பத்தினரை பிரதிநிதிகள் குழு சந்தித்தது. ஷேக் ஹலீம் மற்றும் அவருடன் இருந்த மூன்று நபர்களும் குழந்தை கடத்தல் காரர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு நீதிக்காக தனியாக போரடிக் கொண்டிருக்ககூடிய ஹலீமுடைய மூத்த சகோதரர் ஷேக் சலீம் மற்றும் மகனை இழந்த துயரில் இருந்து மீளாத ஹலீமின் தந்தையை, பிரதிநிதிகள் குழு சந்தித்தது. அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் பாதிப்பிற்கு உள்ளான சஜ்ஜாதை சந்திக்க சென்ற பொழுது, பிரதிநிதிகள் குழுவுடன் ஷேக் சலீமும் உடன் சேர்ந்து கொண்டார். துரதிர்ஷ்ட இரவான மே 2017 அன்று யாருடைய வீட்டிலிருந்து நான்கு நபர்கள் வெளியே இழுத்து போடப்பட்டு,அடித்து படுகொலை செய்யப்பட்டார்களோ அந்த  முக்கிய சாட்சியையும் அவர்கள் சந்தித்தனர். நடந்த கொடூரமான சம்பவங்களை கேட்டபிறகு, பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் உறுதியாக நிற்கவும், நீதிக்காக போராடவும் வலியுறுத்தினார்.

ஜூலை 18ம் தேதி ராஞ்சியிலுள்ள ஆர்.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்ட வார்டில் இருக்கும் உஸ்மான் அன்சாரியை சந்திக்க பிரதிநிதிகள் குழு ராஞ்சி சென்றது, மருத்துவமனையில் இருக்கும் அவரை மருமகள் மட்டுமே தனியாக கவனித்துக் வருகிறார். பசு குண்டர்களால் நன்கு திட்டமிட்டு மூட்டப்பட்ட தீயில் இழுத்து போடப்பட்டு பெரும்பான்மையான உடல் எரிந்துபோன தனது மாமனாருக்கு இழைக்கப்பட்ட  கொடூர சம்பவங்களை நேரில் பார்த்த சாட்சியான அவருடைய மருமகள் குழுவினருடன் பகிர்ந்து கொண்டார்.

கிராமத்திலிருந்த அவருக்கு சொந்தமான அனைத்தும் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டது, அதனால் படுகாயங்களிலிருந்து நிவாரணம் அடைந்த பிறகு, தான் எங்கு செல்வது என்று தனது நிலையை தேசிய தலைவரிடம் அவர் கவலையுடன் தெரிவித்தார். அவரது குடும்பத்துடைய மறுவாழ்விற்கான அனைத்து சாத்தியமான உதவிகளையும் செய்து தருவதாக தேசிய தலைவர் வாக்குறுதி அளித்துள்ளார். அதே நாள் மாலையில் ராஞ்சியிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ராம்கத் மாவட்டத்திலிருக்கும் அலீமுத்தீனை சந்திக்க சென்றனர். ரமலான் பண்டிகை முடிந்த அடுத்த நாளே, கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றார் என்ற குற்றச்சாட்டிற்காக அவர் அடித்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்திலிருந்தே, பஞ்சாயத்து தலைவர், அண்டை வீட்டார்கள் மற்றும் குடும்பத்தினர்களின் ஆதரவு இருப்பதால், நீதிக்காக தொடர்ந்து போராடப் போவதாக அவருடைய மூத்த மகள் உறுதியளித்துள்ளார்.

ஜூலை 19ம் தேதி, புது தில்லியிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஹரியானா மாவட்டத்திலுள்ள நூஹ் கிராமத்தில் வசிக்கும் பெஹ்லு கானுடைய குடும்பத்தை சந்தித்த பிரதிநிதிகள் குழு தில்லி சென்று, பிறகு அங்கிருந்து ஹரியானாவை நோக்கிய பயணத்தை மேற்கொண்டது. கிராம சந்தையில் மாடுகளை கொள்முதல் செய்ததற்காக கொடுக்கப்பட்ட ஒப்புதல் ஆவணங்களை அவருடைய இரண்டு மகன்களான இர்ஷாத் மற்றும் ஆரிஃப் முன்னிலையிலேயே அழிக்கப்பட்டதையும் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டதையும் அவர்கள் நினைவுகூர்ந்தனர். இரண்டு நாட்களுக்கு பிறகு  அவர் பலியானார். 

தற்போது அவர்கள் கொள்முதல் ஆவணங்களின் நகல்களை வாங்கியுள்ளனர். மேலும், ராஜஸ்தானில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதிபடுத்துவதற்காக நீண்ட நெடிய சட்ட ரீதியான போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதிநிதிகள் குழு தில்லியை நோக்கி திரும்பும் போது  ஹாபிழ் ஜுனைதுடைய வீட்டிற்கு சென்று,பெருநாள் ஆடைகளை வாங்க ரயிலில் தில்லிக்கு சென்ற ஹாபிழ் ஜுனைத் பெருநாள் கொண்டாட அன்று மாலை திரும்பி வராத துயரத்தை மறக்க முயற்சி செய்யும் உயிர் தப்பித்த அவருடைய சகோதரன் மற்றும் தந்தையை பிரதிநிதிகள் குழு சந்தித்தது.

முஸ்லிம் போன்ற தோற்றத்திலிருக்கும் எவரையும் தாக்குவதற்கு தயாராகவுள்ள, போலியான தேசியவாதத்தை முன் வைக்கும் வெறிபிடித்த குடிகார கும்பல், ஹாபிழ் ஜுனைதை தடுத்து நிறுத்தி அடித்து படுகொலை செய்துள்ளனர். அவரது உடம்பில்  30க்கும் மேற்படுத்த இடத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரயிலிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். பெருநாளுக்கு இரண்டு நாள் முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஜூலை 20ம் தேதி, அவர்களுடைய சொந்த கிராமத்தில் பாபா சாஹிப் அம்பேத்கருடைய சிலையை நிறுவ முயன்ற போது உயர் ஜாதி தாக்கூர்களுடைய அட்டூழியங்களால் பாதிப்பிற்கு உள்ளான தலித்துகளை சந்திக்க தாருல் உலூம் தேவ்பந்திற்கு அருகில் உள்ள ஷப்பிர்பூர் கிராமத்திற்கு பிரதிநிதிகள் குழு சென்றது. வாள் ஏந்திய வெறிபிடித்த சாதி இளைஞர்களை கொண்டு, கிராமங்களில் இருக்கும் நிராதரவான தலித் மக்களை  காயப்படுத்துவதும் சொத்துகளை சேதப்படுத்துவதும் தான் உயர் ஜாதியினருடைய செயலாக இருந்து வருகிறது, தலித் சமூகத்தை சார்ந்த ஒரு கிராம பஞ்சாயத்து தலைவரும் அவரது இளைய சகோதரரும் கடந்த இரண்டு மாதங்களாக சிறையில் உள்ளனர்.

சென்ற எல்லா இடங்களிலும், சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருடைய வாழ்க்கையை சீர்குலைக்கும் இந்துத்துவா பயங்கரவாதத்தின் புதிய முகத்தை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவரும் அவருடைய குழுவும் முயற்சித்தது. நம்பிக்கை இழந்து விட வேண்டாம் என்றும் நீதிக்கான போராட்டத்திற்கு  தேவையான சட்ட உதவிகளை பாப்புலர் ஃப்ரண்ட் செய்துதருவதாகவும் பிரதிநிதிகள் குழு அவர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளது.

Leaders Visit (1) Leaders Visit (2) Leaders Visit (3) Leaders Visit (4) Leaders Visit (5) Leaders Visit (6)இப்படிக்கு

M.முஹம்மது அலி ஜின்னா,
தேசிய பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *