Breaking News

அல் அக்ஸாவில் நடக்கும் இஸ்ரேலிய அராஜகத்திற்கு எதிராக போராட முன் வாருங்கள்: பாப்புலர் ஃப்ரண்ட்

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேத்தில் இருக்கும் அல் அக்ஸா பள்ளிவாசலில் முன்னெப்போதும் இல்லாத கடுமையான கட்டுபாடுகளை விதித்து புனித பள்ளிவாசலுக்கு வரும் ஃபலஸ்தீனியர்களை சித்திரவதை செய்யும் இஸ்ரேலிய அதிகாரிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E. அபூபக்கர் வன்மையாக கண்டித்துள்ளார்.

அல் அக்ஸா பள்ளிவாசலில் ஃபாலஸ்தீனியர்கள் நுழைய மறுக்கப்பட்டு வருகின்றனர் மேலும் பள்ளிவாசல் வளாகத்திற்குள் இருக்கும் இஸ்லாமிய அவ்காஃப் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. ஜெருசலேத்தில் வசிப்பவர்கள் பழைய நகரத்திற்குள் நுழைவதை தடுக்க, பழைய நகரத்திற்கு செல்லும் நுழைவாயில்களை இரும்பு தடுப்புகளை கொண்டு இஸ்ரேலிய படைகள் மூடியுள்ளது.

யூத குடியிருப்புகள் தங்களது சட்டவிரோத ஊடுருவல்களால் பள்ளிவாசலை சூழ்ந்துள்ள அமைதியான நிலையை சீர்குலைக்க குழப்பம் செய்து வருகின்றனர், இது பெரும்பாலும் வன்முறை மோதல்களுக்கு இட்டுச் செல்கின்றது. தற்போதுள்ள சூழலைப் பயன்படுத்தி பள்ளிவாசல் வளாகத்தின் மீது தனது அதிகாரத்தை திணிக்க இஸ்ரேல் முயல்கிறது .மேலும்,ஃபலஸ்தீனிய முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றுவதன் மூலம் ஜெருசலேத்தை ஒரு யூத நகரமாக மாற்றுவதற்கான தனது முயற்சிகளை அதிகரித்து வருகிறது.

மஸ்ஜிதுல் அக்ஸாவில் முஸ்லிம்களுடைய உரிமைகளுக்கு எதிராக நடக்கும் யூத அரசாங்கத்துடைய அராஜகங்களுக்கு எதிராக உலக முஸ்லிம்கள் மௌனத்தை கலைத்து போராட முன் வரவேண்டும் என்று E.அபூபக்கர் அழைப்பு விடுத்துள்ளார். மூன்றாவது புனிதத் தளம், முதல் கிப்லா,மற்றும் விண்ணுலக பயணத்திற்காக  முஹம்மது ﷺ  புறப்பட்ட இடத்தில், அத்துமீறுதல் மற்றும் அதன் புனிதத்ததை கெடுக்கும் செயல்பாடுகளுக்கு எதிராக செயல்பட தனது அரசாங்கங்களுக்கு் அவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஃபலஸ்தீன மக்களுக்கு எதிராக நடக்கும் சர்வதேச சட்ட மீறல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச சமூகம் இஸ்ரேலை பொறுப்பு சுமத்தி கட்டுப்படுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், நடைபெற்று வரும் அனைத்து விதமான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளையும், சட்டவிரோதமாக குடியமர்த்துவதன் மூலம் ஃபலஸ்தீனிய நிலங்கள் திருடப்பட்டு வருவதையும் தடுத்து நிறுத்த ஐ.நா தலையிட வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

இப்படிக்கு

ஷஃபீகுர் ரஹ்மான்
மக்கள் தொடர்பு செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *