Breaking News

உயர் கல்வி உதவித்தொகை 2017 – பாப்புலர் ஃப்ரண்ட் அறிவிப்பு!

2017-ம் ஆண்டிற்கான உயர் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. மேல்நிலை படிப்பு முடித்த பிறகு பட்டப்படிப்பை தொடர விரும்பும் ஏழை மற்றும் தகுதியுடைய மாணவர்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம். 2017-18 கல்வியாண்டில் தங்கள் படிப்பைத் தொடரும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. தேசிய கல்வி உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ச்சியான 7 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.

ஒரு ஆண்டுக்கும் குறைவான காலவரையறை அல்லாத முதுகலை பட்டம் (PG Courses), இளங்கலை பட்டம் (Degree) மற்றும் டிப்ளோமா (Diploma) அல்லது பிற உயர்கல்வி  படிப்புகளை பயிலும் மாணவர்களே இதற்கு தகுதியானவர்கள். பத்திரிகை துறை (Journalism), சட்டம் (Law) மற்றும் சமூகப் பணி (Social Work) போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். www.popularfrontindia.org என்ற இணையதள லிங்க் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜுலை முதல் ஆகஸ்ட் வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31 ஆகஸ்ட் 2017.

2011-12 கல்வியாண்டில், தேசிய அளவிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் தொடங்கியது. இது வரை 5.2 கோடி ருபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை 13 மாநிலங்களை சார்ந்த 6482  மாணவர்களுக்கு (3890 மாணவர், 2592 மாணவியர்) வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு கல்வி உதவித்தொகைக்கான நிதியை திருப்பி செலுத்தி  பொது சமூகத்திற்கு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும்  சேவை செய்திட வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இப்படிக்கு

M முஹம்மது அலி ஜின்னா,
தேசிய பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *