Breaking News

சென்னை தேனாம்பேட்டையில் மாடு ஏற்றிச்சென்ற வாகனத்தை சிறைபிடித்து அமைதியை சீர்குலைக்க முயன்ற பசு குண்டர்கள் மீது தமிழக அரசே, காவல்துறையே கடுமையான நடவடிக்கை எடு!

இந்தியா முழுக்க ‘பசு குண்டர்களால்’ அப்பாவி மக்கள் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகி வருகிறது. தமிழகத்திலும் ‘பசு குண்டர்கள்’ மாட்டு வியாபாரிகளின் வாகனங்களை சிறைபிடிப்பது, அவர்களை தாக்குவது, வழிப்பறியில் ஈடுபடுவது போன்ற சமூக விரோத செயலில் இறங்க ஆரம்பித்து உள்ளனர். அதற்கு அண்மையில் பழனியில் நடந்த நிகழ்வு ஒரு சாட்சி. அமைதி பூங்காவான தமிழகத்தை கலவர பூமியாக்க திட்டமிட்டுள்ள இந்த ‘பசு குண்டர்கள்’ இன்று சென்னையில் மாடு ஏற்றி சென்ற வாகனத்தை சிறைபிடித்து சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். காவல்துறையினர் வாகனங்களில் உள்ள ஆவணங்கள் சரியாக இருந்ததால் மாடு ஏற்றி வந்த வாகனத்தை விடுவித்துள்ளனர். 

‘பசு குண்டர்கள்’ வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் இந்த போக்கை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் தென் சென்னை மாவட்ட தலைவர் நாகூர் மீரான், பாப்புலர் ஃப்ரண்ட் தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜுனைத் அன்சாரி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சட்டம் ஒழுங்கை தங்கள் கையில் எடுத்து கொண்டு வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் இடையூறும், அச்சத்தையும் ஏற்படுத்துவது போல செயல்படும் ‘பசு குண்டர்கள்’ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனாம்பேட்டை காவல்துறையினரிடம் முறையிட்டோம். அப்பொழுது அங்கே இருந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மக்கள் கூடுவதை கண்டு காவல்நிலையத்தில் இருந்து வெளியேறி தங்களது வாகனத்தில் சென்று விட்டனர். ஆனால் தொடர்ந்து காவல் ஆய்வாளர், உதவி ஆணையரிடம் பசு குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்டின் நிர்வாகிகளும், எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகளும் அழுத்தம் கொடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் அடிப்படையில் காவல்நிலையத்தில் இருந்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அமைதியுடன் வெளியேறினோம்.

ஆனால் காவல்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த வேலையில் இந்து மக்கள் கட்சியின் ராம ரவிக்குமாரின் வாகனம் தாக்கப்பட்டதாகவும், அதற்கு பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் தான் காரணம் என்ற பொய்யான குற்றச்சாட்டை பரப்புகின்றனர். இந்து மக்கள் கட்சியின் அழுத்தத்தின் காரணமாக காவல்துறையும் பசு குண்டா்களின் மீது நடவடிக்கை எடுக்காமல், பிரச்சனையை திசைதிருப்ப முயற்சிக்கின்றனா்.  இது காவல்துறையின் ஒருதலைபட்சமான செயல்பாட்டாக காட்டுகின்றது. காவல்துறையின் இந்த போக்கை வண்மையாக கண்டிக்கின்றோம். காவல்துறை உயர் அதிகாரிகள் இந்நிகழ்வை தங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு ‘பசு குண்டர்கள்’ மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். காவல்துறை ‘பசு குண்டர்கள்’ மீது தகுந்த நடவடிக்கை எடுக்க மறுக்கும் நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் வெகுஜன போராட்டத்தையும், சட்ட நடவடிக்கையையும் எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு 

M. நாகூா் மீரான்,
தென்சென்னை மாவட்ட தலைவா்,
பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *