Breaking News

படுகொலை அரசியலுக்கு எதிராக எதிர்ப்பு போராட்டம் மற்றும் வலிமையான கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்! பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் சந்திப்பில் பொது மக்களுக்கு கோரிக்கை!

பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் சந்திப்பு 10. 07.2017 அன்று மாலை கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள மலபார் ஹவுஸில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்வு நாள்தோறும் அதிகரித்து வரும் படுகொலைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை மக்கள் எதிர்க்க வேண்டும் என்றும் அதற்காக அனைத்து ஜனநாயக, சட்ட ரீதியான வழிமுறைகளை நாட்டு மக்கள் கையாள வேண்டும் என்ற கோரிக்கை இந்த கூட்டத்தின் மூலமாக விடுக்கப்பட்டது. 

பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்கள் சந்திப்பிற்கு தலைமை தாங்கிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபுபக்கர் அவர்கள் கூறுகையில், 

பசு பாதுகாப்பு என்ற போர்வையில் மனிதர்களை அடித்து கொல்லும் மத வெறியூட்டப்பட்ட கும்பல், பாசிச மத வெறி செயல்பாடுகள் ஜனநாயக இந்தியாவில் மதவெறி பாசிசத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலுடன் செயல்படும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் கடந்த மூன்று வருட ஆட்சியில் முஸ்லிம் மற்றும் தலித் மக்களை கும்பல் படுகொலை செய்வது என்பது புது நடைமுறை வன்முறையாக தொடர்கின்றது. ஓடும் ரயிலில் 16 வயது ஜூனைத் கொடூரமாக கொல்லப்பட்ட போது பலர் வேடிக்கை பார்த்ததை ஒரு தனிப்பட்ட நிகழ்வாக கருத முடியாது.

தற்போது வெளிவந்துள்ள செய்திகள் மற்றும் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் பசு பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட 28 பேரில் 23 நபர்கள் முஸ்லிம்கள். மொத்தம் நடந்த 63 தாக்குதல்களில் 32 நிகழ்வுகள் பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெற்றுள்ளது என்று கூறினார். மேலும், அவர் கூறியதாவது; இதற்கு உண்மையான காரணம் பசுவின் மீதுள்ள அன்பு அல்ல.  அவர்கள் முஸ்லிம் மற்றும் தலித் மக்களாக இருப்பதே அவர்கள் தாக்கப்படுவதற்கு போதுமான காரணமாகிறது.

ஒரு நூற்றாண்டு காலமாக பிரிவினை மற்றும் விஷம பிரச்சாரம் செய்து வரும் ஆர்.எஸ்.எஸ்-ன் பகிரங்க மற்றும் மறைமுக குண்டர்களின் செயல்பாடுகளே இதற்கு முக்கிய காரணம் ஆகும் என்று அவர் கூறினார்.
நாட்டை உள்நாட்டு போருக்கு தள்ளிய மத்திய மற்றும் மாநில அரசுகளை விமர்சித்த தேசிய தலைவர் அவர்கள், பசு பக்தி என்ற பெயரில் மக்களை கொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கர் பெயர்களை அவ்வப்போது நயவஞ்சமாக பயன்படுத்தும் பிரதமர் அரசியலமைப்பு சட்டம் வழங்கிய பொறுப்பை நிறைவேற்ற மட்டும் முடியவில்லை.

மோடி அவர்களே…சாவர்கர், கோட்சே, கோல்வால்கர் மற்றும் அவர்களை போன்றவர்களை பின்பற்றும் வரை தயவு செய்து காந்தி, அம்பேத்கர் ஆகியோரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய, மண்டல, மாநில தலைவர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இயக்கத்தின் புதிய தலைமையின் கீழ் ஆறுமாத செயல்பாடுகளை மீளாய்வு செய்தனர். தேசிய பொது செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா அவர்கள், மாநில தலைவர்களின் ஆலோசனைகளுக்கு பிறகு இந்த காலக்கட்டத்தில் நிறைவேற்றப்பட்ட செயல்பாடுகளின் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். நம் இயக்கத்தின் வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் தலையீடுகள் இந்த காலகட்டத்தில் நமது இலக்குகளை தாண்டி இருந்தது என்று குறிப்பிட்ட அவர், உண்மையான தலைவர்கள் மற்றும் எண்ணிலடங்கா சகோதர்ரகளின் தியாகத்தையும் உயிர் தியாகம் செய்தவர்களையும் நினைவு கூர்ந்தார்.

விவாதத்தின் இறுதியில், மக்கள் கூட்டத்தின் முன்னிலையிலும் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கிடையிலும் தங்கள் பாதங்களை உறுதிப்படுத்துமாறு பிரதிநிதிகளை கேட்டுக்கொண்டார். இதன் மூலம் நமது இயக்கத்தின் நம்பிக்கை மற்றும் உறுதியை நாடு முழுவதும் உணர செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும் கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :

ராமர் கோயில் சம்பந்தமான முன்னெடுப்புகள் பற்றி தனது அதிருப்தியை வெளியிட்ட பாப்புலர் ஃப்ரண்ட் தற்போதுள்ள நிலையை மாற்ற நினைக்கும் மத்திய மற்றும் உ.பி அரசு உடனடியாக இத்தகைய செயல்பாடுகளை நிறுத்துமாறு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்கள் சந்திப்பு கேட்டுக்கொள்கிறது. மேலும், உடனடியாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் மீறப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 25வது ஆண்டில் நமக்கு மீண்டும் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் கட்டுவதற்கு இத்தேசத்திற்கு பொறுப்பு இருக்கிறது. ஆனால், தற்பொழுது பாபரி மஸ்ஜித் பிரச்சினை என்பது ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினையாக மாறி நிற்பதை கவலையுடன் இந்த கூட்டம் பகிர்ந்து கொள்கிறது. 

பிரதமரின் சமீபத்திய இஸ்ரேல் பயணம் இந்தியாவின் பாரம்பரிய வெளியுறவு கொள்கையான பாலஸ்த்தீனத்திற்கான ஆதரவு என்ற நிலைபாட்டில் இருந்து மாறியிருக்கிறது. இந்த பயணத்தின் மூலம் தீய மற்றும் ஆதிக்க சக்திகளான அமெரிக்கா இஸ்ரேல் கூட்டணியிடம் இந்தியாவின் சுய சார்பை முழுமையாக அடமானம் வைத்துள்ளது.

இந்த கூட்டத்தில் தேசிய துணை தலைவர் ஓ.எம்.ஏ சலாம், செயலாளர் அப்துல் வாஹித் சேட் மற்றும் அனிஷ் அஹமது, பொருளாளர் முகம்மது சகாப்தின் மற்றும் மத்திய செயலக உறுப்பினர்கள் கே.எம்.ஷெரீஃப் மற்றும் இ.எம். அப்துல் ரஹ்மான் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு

M. முஹம்மது அலி ஜின்னா,
தேசிய பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *