Breaking News

தமிழகத்தை கலவர பூமியாக மாற்றுவோம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு! மதவாத பா.ஜ.க வை தேர்ந்தெடுத்தால் மக்கள் இதை தவிர வேறு எதை அவர்களிடம் எதிர்பார்க்க முடியும்! – பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

ஒற்றுமையாக வாழும் இந்திய மக்களிடத்தில் பிரிவினையை ஏற்படுத்தி ரத்தத்தால் இந்த தேசத்தை குளிப்பாட்டி ஆட்சி கட்டிலில் அமரும் யுக்தியை தேசம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி செயல்படுத்தி வருகின்றது. இந்த அடிப்படையில் தமிழகத்திலும் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று பா.ஜ.கவும் அதன் தலைவர்களும் கங்கணம் கட்டிக் கொண்டு கலவர எண்ணத்துடன் செயல்பட்டு வருகின்றனர். தன்னுடைய வீட்டில் தானே பெட்ரோல் குண்டு எறிவது, தங்கள் அலுவலகத்தில் தாங்களே குண்டு வைத்து விட்டு பதட்டத்தை உருவாக்குவது, மசூதியில் பன்றி தலையையும், கோவிலில் கன்றுக்குட்டி தலையையும் வீசி விட்டு கலவர சூழலை உருவாக்க முயல்வது, ராம்நாடு, கோவை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் அவர்களுக்குள் உள்ள சொந்த பிரச்சனையின் காரணமாக தாக்கப்படும்போது முஸ்லிம்கள்தான் செய்தார்கள் என்று கூறி கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தது, திருப்பூரில் தற்கொலை செய்துகொண்ட பா.ஜ.க பிரமுகர் கொலை செய்யப்பட்டதாக கூறி பதட்டத்தை ஏற்படுத்தியது,மசூதியில் தொழுகை நடக்கும் போது கற்களை வீசுவது போன்ற தேச விரோத செயல்களில் பா.ஜ.க மற்றும் சங்பரிவார அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். மேற்கூறிய சம்பவங்களில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு உண்மையை வெளியில் கொண்டு வந்ததன் காரணமாக தமிழகத்தில் இவர்கள் உருவாக்க நினைத்த பல பிரச்சனைகள் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் நிலவும் உறுதியற்ற அரசியல் சூழலை பயன்படுத்திக் கொண்டு கலவர சூழலை சங்க பரிவார அமைப்பின் தலைவர்கள் உருவாக்க நினைக்கின்றார்கள். பா.ஜ.க வின் தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகைக்கு பின்பு இவர்களின் கலவர செயல்பாடு வேகமெடுத்துள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் கன்னியாகுமரியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மத்திய இணை அமைச்சராக உள்ள பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தேசத்தின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பேன் என தான் பதவி ஏற்ற போது எடுத்த உறுதி மொழிக்கு மாற்றமாக தமிழகத்தை கலவர பூமியாக மாற்றுவோம் என பேசியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மதவாத பா.ஜ.க வை தேர்ந்தெடுத்தால் மக்கள் இதை தவிர வேறு எதை அவர்களிடம் எதிர்பார்க்க முடியும். மதவாத பா.ஜ.கவிற்கு எதிராக மதச்சார்பற்ற தேச நலனில் அக்கறையுள்ள சக்திகள் ஓரணியில் இணைய வேண்டும். தமிழகத்தை கலவர பூமியாக மாற்றுவோம் என பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது தமிழக காவல் துறை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக காவல்துறையை கேட்டுக் கொள்கின்றேன்.

இப்படிக்கு 

A. ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, 
தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *