Breaking News

தேசத்தில் உள்நாட்டு போரை ஏற்படுத்த முயற்சித்து வரும் இந்துத்துவ சக்திகளை தடுத்து நிறுத்த பாப்புலர் ஃப்ரண்ட் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது!

முஸ்லிம் – எதிர்ப்பு, தலித் – எதிர்ப்பு தத்துவத்துடைய தாக்கத்தின் அடிப்படையில் சங்பரிவார்கள் செய்து வரும் பிரிவினைவாத பிரச்சாரத்தைப் குறித்து மக்களை எச்சரிக்கை செய்வதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக கூட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுடைய குறிப்பிட்ட அரசியல் இலக்குகளை அடைவதற்கு, இத்தகைய சூழ்நிலைகள் அவர்களுக்கு தேவைப்பட்டாலும், இந்திய ஜனத்தொகையில் அதிகமாக இருக்கும் முஸ்லிம்களையும் தலித்துகளையும் குறிவைத்து அதிகரித்து வரும் ஹிந்துத்துவ வன்முறைகள் இந்த தேசத்தில் வாழும் அனைத்து குழுக்களுக்கும், ஜாதியினருக்கும், சமூகங்களுக்கும் பாதுகாப்பற்ற நாடாக  இந்தியாவை மாற்றிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
 மத்திய அரசின் தோல்விகளால் ஏமாற்றம் அடைந்துள்ள  மக்களின்  கோபத்தை திசை திருப்பும் பொருட்டு, இந்தியர்களை ஒருவருக்கு எதிராக மற்றவரை திசை திருப்பக்கூடிய வேலைகளை சங்கபரிவார் சக்திகள் கடுமையான பொய் பிரச்சாரங்களின் மூலம் செய்து வருகின்றனர்.  அப்பாவி முஸ்லிம்களையும் தலித் மக்களையும் அடித்து கொலை செய்யக்கூடிய பயங்கரமான  அறியாமை காலத்தை நோக்கி தேசத்தை இட்டு செல்ல இது விரும்புகிறது.  ஏழைகளையும் ஒடுக்கப்பட்டவர்களையும் வன்முறைகள் செய்ய தூண்டிவிட்டு பிரிவினை மூலம் அரசியல் லாபத்தை அறுவடை செய்ய அவர்கள் விரும்புகிறார்கள்.
 
இதற்கிடையில், அடித்து கொலை செய்வது என்பது அப்பாவி முஸ்லிம்கள் அல்லது மற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இது குண்டர்களுடைய கலாச்சாரத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட தீமை என உணர முடிகிறது.  இரண்டு நாட்களுக்குள்,  இதை போன்ற நான்கு சம்பவங்கள் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாட்டிறைச்சியோடு அல்லது வேறு காரணங்களோடு சம்பந்தப்படுத்தி நடந்தது என்ன  என்று கூட பார்க்காமல் ஒரு சாதாரண குற்றச்சாட்டிற்கு எந்த ஒரு சராசரி முஸ்லிமும் எந்நேரமும் அடித்து கொலை செய்யப்படலாம். அதிகாரபூர்வ அறிவிப்பின் படி, மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாட்டிறைச்சியின் பெயராலும் பசு பாதுகாப்பு பெயராலும் நடைபெற்ற தாக்குதல்களில் 23 முஸ்லிம்களும் மற்ற சமூகத்தை சேர்ந்த ஐந்து நபர்களும் தங்களது உயிர்களை இழந்துள்ளனர்.

இத்தகைய கொடூரங்களுக்கு எதிராக பல்வேறு குழுக்களிடமிருந்து வரும் ஆதரவை இந்த கூட்டம் பாராட்டியுள்ளது. அடித்து கொலை செய்வதற்கு எதிராக தேசத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவது மரணத்தையும் வெறுப்பையும் விரும்பும் ஏஜெண்டுகளுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகும். அதே நேரத்தில், 16 வயதான ஜுனைத் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட பொழுது நூற்றுக்கணக்கான மக்கள் எந்தவித உதவியும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருந்ததும் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியமளிக்க அவர்களில் ஒருவரும் கூட முன்வரவில்லை என்பதும் காவியுடை தரித்த வன்முறையாளர்கள் மீது மக்கள் மனதில் பதியப்பட்டுள்ள பயத்தின் அளவை குறிக்கின்றது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சொந்தக் கால்களில் நிற்கவும், எல்லாவித சட்ட ரீதியான வழிகளைப் பயன்படுத்தி தங்களைக் தற்காத்துக்கொள்ளவும் இந்த கூட்டம் நினைவூட்டியுள்ளது.
 
பசு பாதுகாப்புக் கும்பல்களின் கொடூரத்தை நிறுத்தவும், சிறுபான்மையினரின் பாதுகாப்பற்ற சூழ்நிலையை போக்க நடவடிக்கை எடுப்பதிலும் எதிர் கட்சிகள் தோல்வி அடைந்துள்ளதற்கு இந்த கூட்டம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.   இந்த  தேசத்தை பயம்  நிறைந்ததாகவும்  உயிரற்றவர்களின்  நிலமாகவும் மாற்றிட வேண்டி திரை மறைவில் நடந்து வரும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுடைய சதியின் விளைவுகளை எதிர் கட்சிகள் மற்றும் மதச்சார்பற்ற சமூகங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மக்களில் பெரும்பாலானோர் இந்த வெறியர்களால் மோதலுக்கு உள்ளாவதும், இத்தகைய தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்காமல் விட்டுவிடுவதும்; பெரும் துன்பம் மற்றும் அழிவைக் கொண்டுவரும் ஒரு உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் E.அபுபக்கர் தலைமை தாங்கினார்.
                                                                                      
இப்படிக்கு
 
M. முஹம்மது அலி ஜின்னா,
தேசிய பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
புதுதில்லி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *