Breaking News

தலித் இயக்க தலைவர்களின் கைது கண்டனத்திற்குரியது! மனித உரிமை குழுக்களுக்கு இடையே வலுவான கூட்டணி கட்டமைக்கப்பட வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட்

தலித் சமுதாய இயக்கங்களை நசுக்குவதற்காக அந்த இயக்கங்களை பூதாகரமாக்கி; அவர்களது தலைவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி கைது செய்ய முயற்சிக்கும் மத்திய அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபூபக்கர் கண்டித்துள்ளார். பல நூற்றாண்டுகளாக திட்டமிட்டு மறுக்கப்பட்டுவரும் அடிப்படை உரிமையான பாதுகாப்பு மற்றும் கண்ணியமான மனித வாழ்க்கைக்காக சாதிய அடக்குமுறைகளை எதிர்த்து போராடும் தலித் இயக்கங்களுடைய போராட்டங்களுக்கு E.அபூபக்கர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
 
தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு  தீவிரம் அடைந்துள்ளது. தெருக்களில் அலைந்து கொண்டு இருக்கும் உயர் ஜாதி வெறியர்கள் மற்றும் மாடு பாதுகாப்பிற்கான கும்பல்களிடமிருந்து மட்டுமல்லாமல், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவின் நிறுவன படுகொலையை நாம் கண்டது போல் புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களிலும் தலித்துகள், தீவிர ஒடுக்குமுறை, பாகுபாடு மற்றும் அந்நியப்படுத்துதலை எதிர்கொள்கின்றனர். பாரம்பரிய தலித் தலைவர்கள், அவர்களின் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த பெரும் துயரத்தை சரி செய்ய தவறிவிட்டன. மேலும், நீண்ட காலமாகவே சமூக நீதிக்கான போராட்டங்களும் கைவிடப்பட்டிருக்கின்றன.  

அவர்களில் சிலர் தலித் மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர். மேலும் அற்பமான தனிநபர் ஆதாயங்களுக்காக ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகளாகவும் ஆகிவிட்டனர். இத்தகைய சூழ்நிலையில், குஜராத், உ.பி. மற்றும் ம.பி. போன்ற மாநிலங்களில் புதிய தலித்  இயக்கங்கள் உருவாகி இருக்கின்றன. குஜராத்தின் ஜிக்னேஷ் மேவானி மற்றும் உத்திர பிரதேசத்தின் சந்திரசேகர் ஆசாத் போன்ற புதிய தலைமுறை தலித் தலைவர்கள், சாதிய புதைகுழிகளில் சிக்கித் தவிக்கும் தலித் மக்களால் நம்பிக்கைக்குரிய வரவேற்பைப் பெற்றுள்ளனர். தலித் அடையாளங்கள் மற்றும் சமூக அரசியல் முன்முயற்சிகளை பாஜக மட்டுமல்ல, பிராமணிய சர்வாதிகாரத்தின் செல்வாக்கின் கீழ் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளும் எப்போதும் குற்றம் சாட்ட முயன்று வருகின்றன. பிற்போக்கு சக்திகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் தீய நடவடிக்கைகளை தோற்கடிக்க தலித், சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை குழுக்களுக்கு இடையே வலுவான கூட்டணி கட்டமைக்கப்பட வேண்டிய அவசியத்தை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
 
உத்திர பிரதேச பீம் இராணுவத்தின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் அதனுடைய உறுப்பினர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டது, ஜாதி மற்றும் பேரினவாத சக்திகளின் கேவலமான அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாகும். ஆகவே, இவர்களை விடுதலை செய்யுமாறும், இவர்களுக்கெதிரான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கைவிடுமாறும் E.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார். சமத்துவம், கண்ணியம் மற்றும் நீதிக்காக போராடும் தலித் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எப்போதும் போலவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
                                                                                       
இப்படிக்கு
 
ஷபீகூர் ரஹ்மான்,
மக்கள் தொடர்பு அதிகாரி,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *