Breaking News

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என்பது எந்த நன்மையும் இல்லாத ஏமாற்று வேலை : பாப்புலர் ஃப்ரண்ட்

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என்பது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள   ஏமாற்று வேலை என நிரூபணமாகியுள்ளதாக  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலக கூட்டம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மூலமாக கருப்பு பணத்தை திரும்ப கொண்டு வருவதும், கள்ள நோட்டுகளை தடுப்பது மற்றும் தீவிரவாதத்திற்கு செய்யப்படும் நிதியுதவியை முடிவுக்கு கொண்டு வருவது என்று கூறப்பட்டது. ஆனால், முடிவு எடுத்து ஏழு மாதங்களாகிய பின்னரும்  கூட அரசு கூறி வந்த நோக்கங்களை அடைந்து விட்டதாக எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. 

எனினும், சில மாதங்களுக்குள் வங்கியின் மொத்த 90% ரொக்கமும் எந்தவொரு பிரச்சனையும் இன்றி வங்கிகளுக்குக் கிடைத்து விட்ட போதிலும் பொதுமக்கள் காலையிலிருந்து மாலை வரை வங்கிகளுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தனர். கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு பிரச்சனைகள் எந்த அளவிற்கு தடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்தவொரு அறிக்கையையும் அரசாங்கத்தால் இன்று வரை வழங்க முடியவில்லை. மாறாக, பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் ஏழைகளும், நடுத்தர மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகிறது. ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்ட சில மாதங்களில், இந்தியாவின் முறைசாரா துறைகள் மிகப்பெரிய வீழ்ச்சியைக் சந்தித்துள்ளது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் வேலையை இழந்து நிற்கின்றனர். தேசத்தின் பொருளாதாரம் மீது ஏற்பட்டிருக்கும் இத்தகைய தாக்கத்தை, பொய்யான கூற்றுக்கள் மூலம் மூடி மறைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அளவீட்டை குறிக்கும் GDP, 2016-17 நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 7.1 சதவீதத்திலிருந்து கடைசி காலாண்டான நான்காவது காலாண்டில் 6.1 சதவீதமாக வீழ்ச்சியை சந்திதுள்ளதாக மத்திய புள்ளியியல் அமைப்பு (CSO) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், தற்போதைய நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP),   முந்தைய ஆண்டின் (2015-16) 8 சதவீதத்தை விட குறைவாக உள்ளது. 

விவசாயிகளின் அவலநிலையை குறித்து மத்திய அரசின் அலட்சியப் போக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்துவதாக இந்த கூட்டம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் பணக்கார பெருநிறுவனங்கள் நிதி தளர்வு மற்றும் உதவிகளை வங்கிகள் மற்றும் இதர அரசாங்க அமைப்புகளிடமிருந்து பெற்று வருகிறது. பாஜக ஆளும் மத்திய பிரேதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் விவசாயிகளுடைய ஜனநாயக போராட்டங்களை  அரசு முற்றிலும் மிருகத்தனமாக எதிர்கொண்டுள்ளது. இந்த கூட்டம் விவசாயிகளுக்கும் அவர்களது போராட்டங்களுக்கும் ஆதரவை தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்திற்கு தேசிய தலைவர் E.அபூபக்கர் தலைமை தாங்கினார். துணை தலைவர் O.M.A. சலாம், பொதுச் செயலாளர் M.முஹம்மது அலி ஜின்னா, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் E.M. அப்துல் ரஹ்மான், அப்துல் வாஹித் சேட் மற்றும் K.M ஷரீப் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


இப்படிக்கு 

M.முஹம்மது அலி ஜின்னா,
தேசிய பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *