Breaking News

யெச்சூரி மீதான தாக்குதல் ஒரு விழித்தெழுவதற்கான அழைப்பாகும் : பாப்புலர் ஃப்ரண்ட்

புதுடில்லி : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மீதான தாக்குதலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபூபக்கர் வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் தேசத்தை பாதிக்கும் ஃபாசிச அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மிக வீரியமான வழிமுறைகளைக் கையாள்வதற்கான விழித்தெழும் அழைப்பாக இத்தகைய தாக்குதல்களை எடுத்து கொள்ள வேண்டும். தேசிய தலைநகரில் தனது கட்சியின் தலைமையகத்தில் யெச்சூரி போன்ற ஒரு முக்கிய தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது எந்த ஒரு இந்தியனும் அவர் எத்தகைய சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், சங்க பரிவார்களின் தீய கரங்களில் இருந்து பாதுகாப்பு பெற முடியாது என்பதற்கு சாட்சியாக இருக்கிறது.

நமது அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள், நிகழ்வுகளின் வீரியத்தை புரிந்துகொள்வதில் தோற்றதின் காரணமாகத் தான்  இத்தகைய தாக்குதல்கள் நடைபெறுகிறது. கடந்த மூன்று ஆண்டு  கால பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் தீவிர பாதுகாப்பற்ற மற்றும் கடுமையான வேதனைகளால் மிகப்பெரிய கவலையுடன் இருக்கின்றனர். நாடு முழுவதும்  பரவலாக நடைபெற்று வரும் மிருகத்தனமான படுகொலைகள், மாடு பாதுகாப்பு கும்பல்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் ரோமியோ குழுக்களின் வன்முறை ஆகியவை விதிவிலக்கான குற்றங்கள் எனக் கருதப்பட்டும், பேசப்பட்டும் வருகின்றன. இது அவர்கள் வன்முறையாளர்கள் என்பதை  மறைப்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்டு வரும் முறைபடுத்தப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாகும். ஆக, இத்தகைய காலகட்டத்தில் ஃபாஸித்தை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் தலைவர்களும் நிலைமையின்  தீவிரத்தை உணர்ந்து, ஃபாஸிச அபாயத்திலிருந்து தேசத்தை காப்பாற்ற ஒருங்கிணைந்து பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இப்படிக்கு
 
ஷபீகூர் ரஹ்மான்,
மக்கள் தொடர்பு அதிகாரி,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *