Breaking News

தமிழ் இலக்கிய துறையின் மாபெரும் ஆளுமையான கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களின் மரணம் தமிழ் இலக்கிய துறைக்கு மாபெரும் இழப்பு!- பாப்புலர் ஃப்ரண்ட் அனுதாபம்!

தமிழ் இலக்கிய துறையின் மாபெரும் ஆளுமையாக திகழ்ந்த கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களின் மரணம் தமிழ் இலக்கிய துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சாகித்ய அகாடமி விருது  உட்பட பல்வேறு விருதுகளை வென்ற அவரின் ஒவ்வொரு கவிதை படைப்புகளும் மக்களிடத்தில் அற்புதமான வரவேற்பை பெற்றன. எண்பது வருட தனது வாழ்வில் தமிழ் இலக்கியதுக்கு அவர் ஆற்றிய  பணியினை வரலாறு என்றும் நினைவு கூறும்.
 
இலக்கியத்தோடு தமது பணியினை அவர் சுருக்கிக் கொள்ளாமல் சமூக களத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு நல்ல பல ஆலோசனைகளை வழங்கியதுடன் தன்னையும் அப்பணியில் இணைத்துக் கொண்டதை மறந்து விட முடியாது. தமிழக அரசின் வக்ஃப் வாரிய துறையின் தலைவராக சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் இழப்பு முஸ்லிம் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.
 
அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். அவரின் மறுமை வாழ்வை  சிறந்ததாக ஆக்கிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இப்படிக்கு
 
M.முஹம்மது இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *