Breaking News

சென்னையில் நடைபெற்ற இலக்கியச்சோலை புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் பங்கேற்பு!

ஹாஷிம்புரா – மே22 இந்தியாவில் மறைக்கப்பட்ட மாபெரும் சிறைப்படுகொலை என்ற தலைப்பில் இலக்கியச்சோலை பதிப்பகத்தின் சார்பாக புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி 21.05.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 07.00 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள உமாபதி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளரும், புதிய விடியல் இணை ஆசிரியருமான B. ரியாஸ் அஹமது MBA அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார்.

இலக்கியச்சோலை சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக குழு உறுப்பினர் M.I. சதக்கத்துல்லா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

தமிழ்நாடு முன்னாள் DGP-யும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான உயர்திரு . R. நட்ராஜ் IPS அவர்கள் ஹாஷிம்புரா – மே22 இந்தியாவில் மறைக்கப்பட்ட மாபெரும் சிறைப்படுகொலை என்ற புத்தகத்தை வெளியிட எழுத்தாளர் வ.கீதா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவரும், இலக்கியச்சோலை சாரிடபிள் டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டியுமான M. முஹம்மது இஸ்மாயில், தமிழ்நாடு முன்னாள் DGP-யும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான உயர்திரு . R. நட்ராஜ் IPS மற்றும் எழுத்தாளர் வ.கீதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

புதிய விடியல் மேனேஜர் S. குலாம் ஹசன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

 

ilakkiya-cholai-book-release-1 ilakkiya-cholai-book-release-5ilakkiya-cholai-book-release-4ilakkiya-cholai-book-release-9ilakkiya-cholai-book-release-8ilakkiya-cholai-book-release-10ilakkiya-cholai-book-release-3 ilakkiya-cholai-book-release-2ilakkiya-cholai-book-release-7

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *