Breaking News

நாகை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக “பள்ளிசெல்வோம்”(SCHOOL CHALO) என்ற பிரச்சாரம் இந்திய தேசம் முழுவதும் நடைபெற்றுவருகிறது. இந்த பிரச்சாரத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள பகுதிகளை கண்டறிந்து கல்விவிழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளுதல், மாணவர்களுக்கு மேற்படிப்பு வழிகாட்டுதல் முகாம் நடத்துதல், இடை நிறுத்தம் செய்த மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்த்தல், (RTE) கட்டாய இலவச கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் கல்வி விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் 20.05.2017 அன்று மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட தலைவர் M.Y.அஷ்ரப் அலி அவர்கள் தலைமை தாங்கினார். Z. சுல்தான் கௌஸ் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதுச்சேரி மாவட்ட தலைவர் A.முஹம்மது ஹசன் குத்துஸ் அவர்கள் கொடியசைத்து கல்வி விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுதுறை மாநில ஒருங்கிணைப்பாளர் A.முஹம்மது இப்ராஹிம் M.COM, CA அவர்கள் முன்னிலை வகித்தார்.

இந்த பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது B.COM.,BL அவர்களும், மாநில செயலாளர் S.அஹமது நவவி அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்விஉபகரணங்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்விஉபகரணங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முஹம்மது யாமீன் அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

 

school-chalo-nagai-7school-chalo-nagai-10school-chalo-nagai-9 school-chalo-nagai-2 school-chalo-nagai-4 school-chalo-nagai-6 school-chalo-nagai-11

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *