Breaking News

முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை தடைசெய்து கைது செய்ததை பாப்புலர் ஃப்ரண்ட் கண்டிக்கிறது. – நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுகோள்!

இனவெறி பிடித்த சிங்கள ராஜபக்சே அரசால் 2009 மே 18 அன்று பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவு நாளை முன்னிட்டு தமிழகத்தில் மே 17 உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பாக சென்னை மெரினாவில் மே 21 ஞாயிறு அன்று நடைபெற இருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை கைது செய்திருப்பது  கண்டனத்திற்குரியது. தமிழக அரசும், காவல்துறையும் மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு தடைசெய்யப்பட்ட பகுதி என்ற காரணத்தை கூறியதன் மூலம் தமிழக அரசுக்கு முள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை என்பது தெளிவாக தெரிய வருகிறது. இந்த போர்க்குற்றத்திற்கு நீதி வேண்டி பன்னாட்டளவில் பல்வேறு ஜனநாயக போராட்டங்கள் நடந்துவரும் இவ்வேளையில் தமிழக அரசு உடனே இந்த விஷயத்தில் தலையிட்டு அனுதாப செய்தி வெளியிட்டு நீதி வேண்டி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். முள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நினைவேந்தல் கூட்டம் என்பது தமிழக அரசே நடத்தவேண்டிய நிகழ்வு. அவ்வாறு இருக்க நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியவர்களை கைது செய்தது கண்டனத்திற்குரியது. எனவே அரசு இதனை கவனத்தில் எடுத்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் உட்பட கைது செய்யப்பட்ட அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனே விடுதலை செய்ய வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது. 

இப்படிக்கு 

எம். முஹம்மது சேக் அன்சாரி,
மாநில துணைத்தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *