Breaking News

வணிக நலன்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஊடகங்கள் : அனில் சமாடியா

சமகால பிரச்சினைகள் குறித்த விரிவுரை மற்றும் கருத்து பரிமாற்ற  நிகழ்ச்சி புது தில்லியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் தலைமை அலுவலகத்தில் பிரதி மாதம் நடைபெற்று வருகின்றது.
 
'மே' மாத நிகழ்ச்சியில் புகழ்பெற்ற கட்டுரையாளர் மற்றும் ஊடக ஆர்வலருமான திரு.அனில் சமாடியா கலந்துகொண்டு உரையாற்றினார். அவர்  தனது உரையில், "இந்தியாவில் உள்ள முக்கிய ஊடக நிறுவனங்கள் வர்த்தக நலன்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், அவை தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நேர்மறையான பங்கு வகிப்பதை எதிர்பார்க்க முடியாது." என்று தெரிவித்தார். மேலும் அவர்களில் பலர், மத்திய அரசாங்கத்தையும் பலர் மாநில அரசாங்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள சங்கபரிவாரங்கள் நலன்களுக்காகவே சேவை செய்து வருகிறார்கள். நீதி, சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் போன்ற அரசியலமைப்பு  தத்துவங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள புதிய ஊடக முயற்சிகளை முன்னெடுக்க முன்வர வேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
 
இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் E.M அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். NCHRO ஒருங்கிணைப்பாளர் அன்சாரி இந்தூரி தொகுத்து வழங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் புதுதில்லி மாநில செயலாளர் ஷஃபிகுர் ரஹ்மான் வரவேற்புரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் தலைமையக மக்கள் தொடர்பு செயலாளர் நன்றியுரையாற்றினார்.
 
திரு. அனில் சமாடியாவுடைய இந்த விரிவரையானது பாப்புலர் ஃப்ரண்ட் புதுதில்லி மாநில கமிட்டி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மாதாந்திர பிரபல விரிவுரை தொடர் நிகழ்சியின் இரண்டாவது நிகழ்ச்சியாகும். வரவிருக்கும் மாதங்களில் சமகால பிரச்சினைகள் குறித்த விரிவுரைகளை பிரபலமான அறிஞர்கள் மற்றும் முன்னணி ஆர்வலர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இப்படிக்கு
 
ஷஃபிகுர் ரஹ்மான்,
மக்கள் தொடர்பு செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகம்
.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *