Breaking News

பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு, தாமதித்த நீதி என்று குறிப்பு!

புது டெல்லி: பாபரி மஸ்ஜித் வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதி போன்ற பாரதிய ஜனதா தலைவர்களை கிரிமினல் சதிக்காக விசாரிக்க அனுமதியளித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வரவேற்றுள்ள அதே சமயம் இதனை தாமதித்த நீதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட மோசமான திட்டமிட்ட குற்றத்தில் ஒரு நீதிமன்ற தீர்ப்பிற்கு 25 வருடங்கள் காத்திருப்பது துரதிஷ்டவசமானது. பாபரி மஸ்ஜித் இடிப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தூண்டியவர்களில் பலர் ஆட்சியதிகாரத்தை அடைந்து சட்டத்தின் பிடியில் சிக்காத அரசியல் வாழ்வை அனுபவித்து வருகின்றனர். இது நமது மதச்சார்பற்ற, ஜனநாயக அமைப்பின் மீது சரிசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ள தோல்வியாகும். அக் ஷர்தம் கோயில் மீதான தாக்குதல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளில் சில வருடங்களிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கின் தாமதத்திற்கு நமது நீதித்துறையை குற்றம் சுமத்த முடியாது. குற்றவாளிகளை தண்டிப்பதில் தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் விருப்பமின்மையே இந்த தாமதத்திற்கான காரணம். பாபரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட்டிருந்தால் பாசிச சக்திகளின் அதிகப்படியான வகுப்புவாத திரட்டலில் இருந்து நாட்டை பாதுகாத்திருக்க முடியும். மதச்சார்பற்ற கட்சிகளின் சந்தர்ப்பவாத மற்றும் கொள்கையற்ற முடிவுகளே இந்த குற்றவாளிகள் குற்றத்தில் இருந்து தப்பிக்க உதவியது.
 
தாமதித்தாலும், நீதியின் பக்கம் ஒரு அடியேனும் நாம் முன்னேறியுள்ளோம் என்ற நம்பிக்கையை இந்த தீர்ப்பு அளிக்கிறது. நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை மீட்பதற்கு இது நிச்சயம் உதவி செய்யும்.
 
இப்படிக்கு
 
இயக்குநர்,
ஊடகம் மற்றும் மக்கள் தொடர்புத்துறை,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *