Breaking News

டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச்செயலாளர் நேரில் சென்று ஆதரவு!

கடந்த 20 நாட்களாக அய்யாக்கண்ணு அவர்களின் தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் இறந்துவிட்ட நிலையிலும் கூட மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளின் இந்த போராட்டத்தையும், அவர்களின் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் M. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் இன்று (02.04.2017) டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசிற்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்தார். இந்நிகழ்வின் போது பாப்புலர்  ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநில தலைவர் பர்வேஷ் அஹமது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வடக்கு மண்டல செயலாளர் அனிஷ் அன்சாரி ஆகியோர் உடனிருந்தனர்.


delhi-former-protest-1 delhi-former-protest-2 delhi-former-protest-3 delhi-former-protest-4 delhi-former-protest-5 delhi-former-protest-6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *