Breaking News

அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் அஹமது நவவி கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் முஸ்லிம்களும் இந்துக்களும் சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். செய்துங்கநல்லூரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் இந்துக்களுக்கு சொந்தமான ஆறு சென்ட் அளவில் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகாமையில் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் பொது பாதை உள்ளது. இந்த பாதையை மறைத்து கோவிலை சட்டத்திற்கு புறம்பாக விரிவாக்க இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த மதவெறியர்கள் முயற்சி செய்துள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் எதிர்க்கவே வருவாய்த்துறை அதிகாரிகள் கோவில் இடத்தை தாண்டி ஆக்கிரமித்து மதில் சுவர் கட்டக்கூடாது என தடை விதித்தனர்.
 
இந்நிலையில் வருவாய் துறையினரின் தடையை மீறி  வன்முறையை தூண்டும் வகையில்  இன்று (26-3-2017) கோவில் சுவர் கட்டுவது சம்பந்தமான கூட்டம் நடப்பதாக நோட்டீஸ் வினியோகித்து கட்டுமான பணிகளை துவக்க முயற்சி செய்துள்ளனர்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம்களை இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த வன்முறையாளர்கள் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். முஸ்லிம்களின் வீடுகளின் மீதும் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதில் பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்து முன்னணியினரின் வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையோ அப்பாவி முஸ்லிம்களை பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைத்து கைது செய்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும்.

எனவே காவல்துறை செய்துங்கநல்லூரில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
 
பொது மக்கள் பயன்படுத்தும் பாதையை ஆக்கிரமிக்க முயன்று அதை தட்டிக்கேட்ட முஸ்லிம்களை கொலைவெறி தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த வெறியர்களை கைது செய்ய வேண்டும். கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான அப்பாவி முஸ்லிம்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.                                                                            
                                                                                                              
இப்படிக்கு
 
எஸ்.அஹமது நவவி,
மாநில செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *