Breaking News

கல்வி திட்டம்: எதிர்காலத்தை கட்டமைப்பதில் மக்களின் பங்களிப்பை கோரும் பாப்புலர் ஃப்ரண்ட்

ஒதுக்கப்பட்ட சமூகங்களை வலிமைப்படுத்துவதற்கு போராடி வரும் தேசிய இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இவ்வாண்டிற்கான கல்வி திட்டத்தை அறிவித்துள்ளது. ஒளிமயமான எதிர்காலத்தை கட்டமைப்பதின் ஓர் அங்கமான இத்திட்டத்தை நிறைவேற்ற மக்களின் பங்களிப்பை கோரியுள்ளது. கடந்த ஒரு தசாப்தமாக பாப்புலர் ஃப்ரண்ட் நடைமுறைப்படுத்தி வரும் கல்வி திட்டத்தில் பள்ளி செல்வோம் (ஸ்கூல் சலோ), முழுமையான கல்வி கிராமம் (சர்வ சிக்‌ஷா கிராம்) மற்றும் கல்வி உதவி தொகை வழங்கும் திட்டங்கள் போன்ற தனித்துவம் வாய்ந்த திட்டங்கள் கல்வி திட்டத்தின் குறிப்பிடத்தக்கவை என்று இயக்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் முகம்மது அலி ஜின்னா தெரிவித்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்களால் இப்பணிகளை உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடனும் பொதுமக்களின் தாராள கொடையினாலும் 16 மாநிலங்களில் நிறைவேற்ற முடியும் என்று முகம்மது அலி ஜின்னா தெரிவித்துள்ளார். 2012 முதல் 2016 வரையிலான ஐந்து வருட காலத்தில் ஸ்கூல் சலோ நிகழ்ச்சிகளில் 107,634,568 ரூபாய் (10.76 கோடி) செலவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கிராம அளவிலான கல்வி கணக்கெடுப்பு, பள்ளி சேர்க்கைக்கான ஒத்துழைப்பு, படிப்பை இடைநிறுத்தியவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது மற்றும் பள்ளி உபகரணங்கள் (ஸ்கூல் கிட்) வழங்குவது முதலியவை ஸ்கூல் சலோ திட்டத்தில் உள்ளடங்கும். 2012 முதல் 2016 வரையிலான காலக் கட்டத்தில் 3,31,587 (3.31 இலட்சம்) பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூல் கிட்கள் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கிராமங்களில் ஸ்கூல் சலோ திட்டத்தை தொடர்ச்சியாக பின்பற்றுவதும், உயர்நிலை பள்ளி வரை இடைநிறுத்தங்கள் இல்லாமல் பின்தங்கிய ஒரு கிராமத்தை நூறு சதவிகிதம் கல்வியறிவு பெற்ற கிராமமாக மாற்றுவது ‘சர்வ சிக்‌ஷா கிராம்’ திட்டத்தின் நோக்கங்களாகும். இத்திட்டம் பீகார், தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசத்தின் சில கிராமங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

தகுதியும் திறமையும் வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மேல் கல்வி உதவித் தொகைகளை பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கி வருகிறது. 2012 முதல் 2016 வரையிலான ஐந்து வருட காலத்தில் 37,162,757 ரூபாய் (3.79 கோடி) கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகளை தேர்ந்தெடுக்கும் போது சட்டம், இதழியல், சமூக பணிகள் குறித்து பயிலும் மாணவர்களுக்கும் மஸ்ஜித் இமாம்களின் குழந்தைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் 6056 மாணவர்கள் இந்த கல்வி உதவி திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கல்வி சேர்க்கை காலத்திற்கு ஏற்ப 2017ஆம் ஆண்டிற்கான ஸ்கூல் சலோ பிரச்சாரம் பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை மூன்று கட்டங்களாக இரண்டு மாத கால அளவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச் செயலாளர் தெரிவித்தார். 2017-18 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய கல்வி உதவிக்கான விண்ணப்பங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இந்த வருடத்தில் இருந்து அனைத்து கல்வி திட்டங்களுக்கான நிதி திரட்டலும் Popular Front Edu-Care Fund என்ற ஒரே கணக்கின் கீழ் செயல்படுத்தப்படும் என்றும் முகம்மது அலி ஜின்னா தெரிவித்தார்.
 
இப்படிக்கு

மக்கள் தொடர்பு அதிகாரி,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *