Breaking News

கடையநல்லூரில் எழுச்சியுடன் நடைபெற்ற யூனிட்டி மார்ச் மற்றும் பொதுக்கூட்டம்!

ஒடுக்கப்பட்ட மற்றும் வஞ்சிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17 ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கொண்டாடி வருகின்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய இயக்கமாக அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கொடியேற்றம் மற்றும் பொதுக்கூட்டங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் மாபெரும் ஒற்றுமை அணிவகுப்பு, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கிழக்கு பஜார் பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு மற்றும் பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் A.முகைதீன் அப்துல் காதர் தொடங்கி வைத்தார். மணிக்கூண்டு வழியாக சென்ற அணிவகுப்பு, காயிதே மில்லத் திடலில் நிறைவு பெற்றது. தொடர்ந்து ஒற்றுமை கீதத்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. 

பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் S.M.திப்பு சுல்தான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் KK.A.லுக்மான் ஹக்கீம் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் M.முஹம்மது அலி ஜின்னா சிறப்புரையாற்றினார். 

அவர் தன்னுடைய உரையில் சுதந்திர இந்தியாவின் 70 வருடகாலம் எந்தவித பெரிய முன்னேற்றத்தையும் கண்டிராத முஸ்லிம் சமூகத்தை முன்னேற்றத்தின் பால் அழைத்துச் செல்லும் மக்கள் பேரியக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. 100 கோடிக்கும் மேல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சம உரிமை கிடைக்கப் போரடும் புரட்சி இயக்கமே பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியா. 

RSS சங்பரிவாரங்கள், BJP அரசின் தேச மற்றும் மக்கள் விரோத போக்கினை 25 வருடங்களுக்கு முன்னமே பறைசாற்றிய பேரியக்கம். இந்தியா ஒரு விவசாய நாடு. நம் நாட்டின் விவசாயிகள் தங்கள் வாய்களில் பாம்பையும், எலியையும் கடித்துக்கொண்டு இரயில் தண்டவாளங்களில் படுத்திருக்கும் அவலம். கறுப்புப் பணத்தை 100 நாட்களில் ஒழிப்போம் என்று சபதமேற்ற மோடி அதன் பட்டியலைக் கூட இன்றளவும் வெளியிடவில்லை. ஒரே நாளில் ரூபாய் நோட்டை மதிப்பிழக்கச் செய்து,  மக்களின் துயரத்திற்கு காரணமாகியது. தன்னையும், RSS -யையும் எதிர்க்கும் மாணவர்களை, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை தேசத் துரோகிகள் என்று சித்தரிப்பதே மோடி அரசின் வேலை. தேசியக் கொடியை மதிக்காதவர்கள் தேசப்பற்றைப் பற்றி பேசுகின்றார்கள்.

மோடி ஆட்சியில் விசாரணை சிறைவாசிகள் எண்ணிக்கை 68% அதிகரித்துள்ளது. பல வருடங்களுக்குப் பின் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டவர்கள். “நான் ஏன் கைது செய்யப்பட்டேன்” என்று கேட்கும் அவல நிலை. முஸ்லிம்கள், தலித்கள், பழங்குடியினருக்கு எதிராக பயன்படுத்தப்படும் UAPA கறுப்புச் சட்டம்.

BJP-ன் முஸ்லிம் விரோத செயல்பாட்டை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம். “மழைக்கோர்ட்டை அணிந்து கொண்டு குளிப்பது” என்று மன்மோகன்சிங்கை விமர்சித்த மோடி தான் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தில் முஸ்லிம்களின் இரத்தத்தில் குளிக்கும் போது எந்தக் கோர்ட்டை அணிந்திருந்தார். என்றாவது ஒரு நாள் நீதி வென்றே தீரும்.!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லிம் சமூகத்தை வலிமைப்படுத்தி அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை உள்ள இந்தியாவை உருவாக்குதல் என்ற இலட்சியத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மக்களோடு சேர்ந்து பயபக்தியுடன் உழைக்கும் என்று இங்கே பிரகடனப் படுத்துகிறோம் என்றார்.

இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் A. ஹாலித் முஹம்மது, SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் M.நிஜாம் முகைதீன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

 

popular-front-day-kadayanallur-16popular-front-day-kadayanallur-3 popular-front-day-kadayanallur-4 popular-front-day-kadayanallur-5 popular-front-day-kadayanallur-6 popular-front-day-kadayanallur-7 popular-front-day-kadayanallur-8 popular-front-day-kadayanallur-9 popular-front-day-kadayanallur-10 popular-front-day-kadayanallur-11 popular-front-day-kadayanallur-13 popular-front-day-kadayanallur-14 popular-front-day-kadayanallur-15 popular-front-day-kadayanallur-17 popular-front-day-kadayanallur-18popular-front-day-kadayanallur-21popular-front-day-kadayanallur-20popular-front-day-kadayanallur-12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *