Breaking News

அதிரையில் எழுச்சியுடன் நடைபெற்ற யூனிட்டி மார்ச் மற்றும் பொதுக்கூட்டம்!

சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றிவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17 ஆம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றோம். 

அதனடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய இயக்கமாக அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இவ்வருடம் கூடுதல் சிறப்புடன் இத்தினத்தை கொண்டாடும் விதமாகவும் சமூகத்தின் சுதந்திரம், நீதி, பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும் அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்கள் பங்குபெற்ற சீருடையுடன் கூடிய யூனிட்டி மார்ச் (ஒற்றுமை பேரணி) அணிவகுப்பு நடை பெற்றது.

இந்த ஒற்றுமை பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொருளாளர் N.M. ஷாஜகான் அவர்கள் கொடியசைத்து இனிதே துவங்கிவைத்தார். ஒற்றுமை பேரணியானது அதிரை வண்டிப்பேட்டை பகுதியில் இருந்து டிரம்ஸ் வாத்தியம் முழங்க தொண்டர்களின் கம்பீரமான அணிவகுப்பு மாலை 4.20 மணி அளவில் துவங்கி கடற்க்கறை தெரு பகுதியில் உள்ள ஐ.டி.ஐ திடலை வந்தடைந்தது. 

அதை தொடர்ந்து மாலை 5.00 மணி அளவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் A. ஹாஜா அலாவுதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். 

சிறப்பு விருந்தினர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணை தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி S. வேலுச்சாமி, SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் A. ஆபிருதீன் மன்பஈ ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இப்பொதுக்கூட்டதின் இறுதியாக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் N. மர்சூக் அகமது அவர்கள் நன்றி உரை ஆற்றினார்கள். இப்பொதுக்கூட்டதில் பெண்கள், குழந்தைகள் உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கலந்துக்கொண்ட மக்கள் பாப்புலர் ஃப்ரண்ட் தின வாழ்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டு, நாங்கள் சுதந்திரம், நீதி, பாதுகாப்பின் பாதுகாவலர்களாக உறுதியாக நிற்போம் என்று பறைசாற்றி சென்றனர்.
 

popular-front-day-2017-adirai popular-front-day-2017-adirai-6 popular-front-day-2017-adirai-7 popular-front-day-2017-adirai-12 popular-front-day-2017-adirai-11popular-front-day-2017-adirai-13popular-front-day-2017-adirai-18popular-front-day-2017-adirai-8 popular-front-day-2017-adirai-9 popular-front-day-2017-adirai-10

popular-front-day-2017-adirai-15 popular-front-day-2017-adirai-16 popular-front-day-2017-adirai-17

popular-front-day-2017-adirai-8 popular-front-day-2017-adirai-9 popular-front-day-2017-adirai-10popular-front-day-2017-adirai-14popular-front-day-2017-adirai-58popular-front-day-2017-adirai-2 popular-front-day-2017-adirai-3 adirai-3 adirai-1 popular-front-day-2017-adirai-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *