Breaking News

கோவையில் எழுச்சியுடன் நடைபெற்ற யூனிட்டி மார்ச் மற்றும் பொதுக்கூட்டம்!

சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றிவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17 ஆம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றோம். அதனடிப்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய இயக்கமாக அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இவ்வருடம் கூடுதல் சிறப்புடன் இத்தினத்தை கொண்டாடும் விதமாகவும் சமூகத்தின் சுதந்திரம், நீதி, பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும் கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்கள் பங்குபெற்ற சீருடையுடன் கூடிய ‘யூனிட்டி மார்ச்’(ஒற்றுமை அணிவகுப்பு) மற்றும் பேரணி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட இந்நிகழ்ச்சியின் துவக்கமாக மாலை சரியாக 3.30மணிக்கு அணிவகுப்பு மற்றும் பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் A.முஹம்மது பயாஸ் அவர்கள் கொடியசைத்து துவங்கிவைத்தார்கள். அணிவகுப்பு கோவை குனியமுத்தூர் பகுதியில் தொடங்கி ஆத்துபாலம் பகுதியில் உள்ள ஷஹீத் உபைதுர்ரஹ்மான் திடலில் அணிவகுப்பு நிறைவடைந்தது. 

அதனை தொடர்ந்து மாலை சரியாக 5.30மணி அளவில் ஷஹீத் உபைதுர்ரஹ்மான் திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தெற்கு மாவட்ட தலைவர் K. முஜிபுர்ரஹ்மான் அவர்கள் தலைமை தாங்கினார்கள், கோவை மாவட்ட செயலாளர் M.Y.அப்பாஸ் வரவேற்புரை நிகழ்த்த சிறப்பு விருந்தினர்களான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில தலைவர் தோழர் வேல்முருகன், PFI தேசிய செயற்குழு உறுப்பினர் A.S. இஸ்மாயில், SDPI மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக், CFI மாநில தலைவர் S. முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் PFI மாநில செயற்குழு உறுப்பினர்கள் T.M.இப்ராகிம் பாதுஷா, R.நவாஸ் மற்றும் SDPI கோவை மண்டல தலைவர் A.முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தனது உரையில்…

பிப்ரவரி 17, 2017 அன்று பெங்களூரில் நடைபெற்ற எம்பவர் இந்தியா மாநாட்டில் அறிவிக்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் இன்று தனது 10 வது ஆண்டை பூர்த்தி செய்துள்ளது. சுதந்திரம், நீதி, பாதுகாப்பு ஆகியவற்றை பெற்று அதன் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் சக்திபடுத்துதலே இதன் குறிக்கோள் ஆகும். கடந்த பத்து ஆண்டுகளாக பாஸிசத்தின் செயல்பாடுகளால் மோசமான மாற்றங்களை நமது நாடு சந்தித்து வருவதையும் இப்பொழுது நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் பாப்புலர் ஃப்ரண்ட் அன்றே எச்சரித்தது, 

குஜராத்தில் இருந்து வந்த பாதி ஆடையை அணிந்த மனித நேயமிக்கவருக்கு பதிலாக விலையுயர்ந்த ஆடைகளில் மோகம் கொண்ட தன்னைத் தானே உயர்வாக கருதுபவருடைய படங்கள் நாடு முழுவதும் விசிரியடிக்கப்படுக்கின்றன, வேலை வாங்குவதற்கும் ஏமாற்றுவதர்க்குமே மக்கள் என்று நினைக்கும் ஒருவர் நமது ஆட்சியாளராக உள்ளார் இதை பாப்புலர் ஃப்ரண்ட் முன்னரே கூறியது, இது முஸ்லிம்களுக்கும் இன்ன பிற சிறுபான்மையினருக்கும் எதிரான அச்சுறுத்தல் மட்டுமல்ல, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற தேசம் என்ற இந்தியாவின் அடையாளத்திற்க்கே எதிரானது ஆகும். 

மேலும் இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்க்குலைத்து மற்றவர்களுக்கு சம உரிமையும் நீதியும் இல்லாத இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாகவும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கத்தில் பாசிச மற்றும் கார்பரேட் அஜெண்டாக்கள் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தால் கட்டுபடுத்தப்படுகின்றன என்பதற்கும் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. இதேபோல் போல் அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்க்கான முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படுவது, பொது சிவில் சட்டத்திற்கான அழைப்பு போன்றவை நமது தேசத்தின் பன்முகத்தன்மை மற்றும் மத சுதந்த்திரத்திற்க்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றது. இதுப்போன்ற நிகழ்வுகள் பாஸிசம் மற்றும் வெறித்தனத்தை கண்டுக்கொள்ளாமல் விட்டதற்க்கான விலையை நமது தேசம் தற்போது கொடுத்து வருகிறது என்பதையே காட்டுகிறது. எனவே அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களும் கள எதார்த்தத்தை உணர்ந்து பாஸிசத்தை கட்டுக்குள் வைக்க ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பொதுக்கூட்டதின் இறுதியாக தெற்கு மாவட்ட செயலாளர் A.அன்சர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். இப்பொதுக்கூட்டதில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.


 

popular-front-day-2017-covai-1 popular-front-day-2017-covai-2 popular-front-day-2017-covai-3 popular-front-day-2017-covai-4 popular-front-day-2017-covai-5 popular-front-day-2017-covai-6 popular-front-day-2017-covai-7m-y-abbasmujiburahmanmusthafanellai-mubaraq velmuruganmohammed-ismailansar-fartheen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *