Breaking News

சென்னையில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் பங்கேற்பு!

ஜல்லிகட்டுப் போராட்ட முடிவில் மாணவர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் இன்று (07.02.2017) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்தகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்கள்.

இந்த கண்டன போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் M. முஹம்மது சேக் அன்சாரி, மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

 

chennai-protest-7 chennai-protest-6 chennai-protest-5 chennai-protest-4 chennai-protest-3 chennai-protest-2 chennai-protest-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *