Breaking News

திருப்பூரில் சமூக ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க மற்றும் சங்க பரிவார பாசிச பயங்கரவாதிகளை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பட்டம்!

திருப்பூரில் தொடர்ந்து மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி சமூக ஒற்றுமைக்கு எதிராகவும், பா.ஜ.க நிர்வாகி முத்து தற்கொலையை கொலை என கூறி திருப்பூரில் கலவரம் செய்ய முயற்சித்த பா.ஜ.க மற்றும் பாசிச பயங்கரவாதிகளை கண்டித்தும், காவல் துறை உடனே அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 06.02.2017 அன்று திருப்பூர் மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனநாயக முறைப்படி காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. காவல்துறை அனுமதி மறுக்கவே தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (06.02.2017) திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஹபிபுர் ரஹ்மான் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அபுதாகிர் முன்னிலை வகித்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் A. ஹாலித் முஹம்மது, SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பசீர் அஹமது, SDPI கட்சியின் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், மக்கள் நடுவர் மன்றம் தங்கராசு பாண்டியர், இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இயக்கம் ஒருங்கிணைப்பாளர் உமர்கயான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் தடையை மீறி நடைபெற்றதால் கலந்துகொண்ட அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

 

against-bjp-protest-tirupur-3 against-bjp-protest-tirupur-2 against-bjp-protest-tirupur-116522670_1880201162263745_216296104_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *