Breaking News

தமிழறிஞர் மணவை முஸ்தஃபா அவர்களின் மறைவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது

பழம்பெரும் எழுத்தாளர், தமிழறிஞர் மணவை முஸ்தஃபா அவர்களின் மரணம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு பேரிழப்பாகும். அன்னாரை பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

தமிழ் இலக்கியவாதியும் முதுபெரும் எழுத்தாளரும், பிரிட்டானிக்கா என்சைக்ளோபீடியாவை தமிழில் மொழி பெயர்த்தவரும், புகழ்பெற்ற மைக்கேல் ஹார்ட் – ன் ‘தி ஹண்ட்ரட்’ என்ற புத்தகத்தை தமிழ் உலகிற்கு இனிய தமிழில் தந்தவருமான மணவை முஸ்தஃபா அவர்களின் மரணம் தமிழ் உலகிற்கு மாபெரும் இழப்பாகும்.   ‘யுனெஸ்கோ  கூரியர்’ தமிழ் மாத இதழில் 35ஆண்டுகள் பணியாற்றிய அவர்கள் தமிழ் மொழி மேம்பாட்டு வாரிய உறுப்பினர், தமிழ் நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினர் போன்ற பல அரசு சார் பதவிகளை வகித்து அந்த பதவிகளுக்கு சிறப்பு சேர்த்த அறிஞர்.

அவர் ஆற்றிய சேவைக்காக அரசும் அரசு சாரா நிறுவனங்களும் பல்வேறு  விருதுகளையும், பாராட்டுகளையும் வழங்கி அவரின் தொண்டுக்கு மணிமகுடம் சூட்டி சிறப்பித்திருக்கிறது. அவர் இன்று நம்மிடம் இல்லாதது அவரின் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல தமிழ் கூறும் உலகிற்கும் பேரிழப்பாகும். அவரின் இழப்பால் வாடும் அனைவருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது. அன்னாரின் மறுமை வாழ்க்கை சிறப்பாக அமைய ஏக இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

manavai-musthafa-design
                                                                                                                                    
இப்படிக்கு
 
M.முஹம்மது இஸ்மாயில்,
மாநிலத் தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ் நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *