Breaking News

சேலத்தில் நடைபெற்ற சர்வ சிக் ஷா கிராம் திட்டத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக சர்வ சிக் ஷா கிராம் திட்டத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் பேச்சுப்போட்டி  26 /01 / 17 வியாழக்கிழமை அன்று மாலை 5:30 மணியளவில் சேலம் பாத்திமா நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேலம் மாவட்ட தலைவர் சையத்அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் சலாம் முன்னிலை வகித்தார்.

SDPI கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் A. முஹம்மது பயாஸ் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அம்ஜத் இப்ராஹிம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பாத்திமா நகர் பகுதி தலைவர் சுல்தான் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.


ssg-4th-year-inaguration-salem-8 ssg-4th-year-inaguration-salem-7 ssg-4th-year-inaguration-salem-6 ssg-4th-year-inaguration-salem-4 ssg-4th-year-inaguration-salem-1 ssg-4th-year-inaguration-salem-3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *