Breaking News

வாலிநோக்கத்தில் நடைபெற்ற ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசனின் சமுதாய நலக்கூடம் திறப்புவிழா நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் பங்கேற்பு!

இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் சார்பாக சமுதாய நலக்கூடம் திறப்புவிழா நிகழ்ச்சி 26-12-2016 அன்று நடைபெற்றது.

ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவண குமார் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் டிரஸ்டி K.S.M இப்ராஹிம் (எ) அஸ்கர் அவர்கள் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து உரையாற்றினார். 

ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் தேசிய பொறுப்பாளர் சபியுல்லா, தமிழக பொறுப்பாளர் பயாஸ் அஹமது, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் இல்யாஸ், மதுரை மாவட்ட தலைவர் ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

இதில் மாணவர்களுக்கான அறிவுத்திறன் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றது அதில் மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். 

இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

rehab-india-community-centre-valinokkam-2 rehab-india-community-centre-valinokkam-1 rehab-india-community-centre-valinokkam-7 rehab-india-community-centre-valinokkam-6 rehab-india-community-centre-valinokkam-5 rehab-india-community-centre-valinokkam-4 rehab-india-community-centre-valinokkam-3

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *