Breaking News

வர்தா புயல் – தொடரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிவாரண பணிகள்.!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் வர்தா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (19-12-2016) பழவேற்காடு பெரிய பள்ளிவாசல் மற்றும் ஜமிலாபாத் பள்ளிவாசலில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் M.முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். 

இந்நிகழ்வின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஜாக், திருவள்ளூர் மாவட்ட தலைவர் நவ்ஃபல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

vardha-puyal-relief-work-1 vardha-puyal-relief-work-2 vardha-puyal-relief-work-3 vardha-puyal-relief-work-4 vardha-puyal-relief-work-5 vardha-puyal-relief-work-6 vardha-puyal-relief-work-7 vardha-puyal-relief-work-8

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *