Breaking News

சிரியா மக்கள் மீது நடத்தப்படும் இன படுகொலையை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆயுதங்களற்ற நிராயுதபாணிகளான அலெப்போ நகரின் அப்பாவி பொதுமக்கள் மீது சர்வாதிகாரி பஷருல் ஆசாத்தும் அவனுடைய கூட்டாளிகள் ரஷியா, ஈரான் படைகளும் கட்டவிழ்த்து விட்டுள்ள இனபடுகொலையை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.

சிரியாவில் நடந்து கொண்டிருப்பது ஒரு மிகப்பெரிய இனபடுகொலை. அந்த நாட்டு மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காக பத்து ஆண்டுகளுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று அவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் வன்முறையில் பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

குழந்தைகளும், பெண்களும் கற்பழிக்கப்பட்டு, உயிரோடு கொளுத்தப்படுகிறார்கள். அப்பாவி பொதுமக்கள் சுடப்பட்டும், அவர்கள் வசிப்பிடங்கள் மீது வெடிகுண்டுகள் வீசியும் அழிக்கப்படுகிறார்கள். ரஷிய வான்படைகள் ஏவுகணைகளை மக்கள் மீது வீசுகிறது. சட்ட விரோதமான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பஸருல் ஆஸாத்தும் அவருடைய கூட்டாளிகளும் சேர்ந்து சிரிய மக்களுக்கு எதிராக செய்து கொண்டிருக்கும் இந்த போர் குற்றங்களை தடுத்து நிறுத்தி மனித குலத்தை அழிவிலிருந்து பாதுகாக்க ஐநா சபையும் உலக அமைப்புகளும் தலையிட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு விடுக்கிறது எனவும் தன்னுடைய அறிக்கையில் கே.எம்.ஷெரீஃப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இப்படிக்கு  
 
மக்கள் தொடர்பு அதிகாரி,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *