Breaking News

வெடி மருந்து தொழிற்சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை மண்டல தலைவர் ஆறுதல்

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்து உள்ள முருங்கபட்டி கிராமத்தில் இன்று (01-12-2016) காலை ஏழு மணியளவில் வெற்றிவேல் எக்ஸ்ப்ளோஸிவ் என்ற வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கோர விபத்து ஏற்பட்டது. இதில் இருபது நபர்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் இதுவரை இரண்டு சடலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை பாப்புலர் ஃப்ரண்ட் தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த பதினைந்து வருடங்களாக இங்குள்ள மக்கள் இதனை அகற்றகோரி பல போராட்டங்களை முன்னெடுத்தும் அரசு கவணம் செலுத்த தவறிவிட்டது. அதன் விளைவு இன்று நாம் பல உயிர்களை இழந்துள்ளோம். அரசு அந்த தொழிற்சாலையை அங்கிருந்து உடனே அகற்ற வேண்டும். அதுபோல் தமிழகத்தில் இயங்கும் இன்ன பிற வெடிமருந்து தொழிற்சாலைகளின்  பாதுகாப்பு அம்சங்களை போர்க்கால அடிப்படையில் கண்காணித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணங்களை உடனே வழங்க வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு  
 
S.அமிர் பாஷா,
தஞ்சை மண்டல தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *