Breaking News

“ஆரோக்கியமான மக்கள்! வலிமையான தேசம்!!” – தேசிய பிரச்சார துவக்க நிகழ்ச்சியாக சென்னையில் நடைபெற்ற ‘மராத்தான்’

ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திடும் தொடர் பிரச்சாரம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கடந்த 7 ஆண்டுகளாக தேசம் முழுவதும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்படுகின்றது. இப்பிரச்சாரத்தில் ஆரோக்கியம் குறித்த கையேடுகள் விநியோகம், மராத்தான் ஓட்டம், விளையாட்டுப்போட்டிகள், மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வருடத்திற்கான (2016) தேசிய துவக்க நிகழ்ச்சியாக சென்னை மெரீனா கடற்கரையில் லைட் ஹவுஸ் அருகில் தொடங்கி உழைப்பாளர் சிலை வரை 5 கிலோமீட்டர் சாலை ஓட்டம் (மராத்தான்) நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரிஃப் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். 
    
இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர்  M. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் M. முஹம்மது சேக் அன்சாரி, SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் M. நிஜாம் முஹைதீன், தமிழ்நாடு தடகள சங்கம் Technical Charge D. சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனைத்தொடர்ந்து மாரத்தானில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற  S. விக்டர் சாமுவேல் ராஜன் அவர்களுக்கும், இரண்டாம்  பரிசு பெற்ற R.  முகிலன் அவர்களுக்கும், மூன்றாம் பரிசு பெற்ற A. மனோ அவர்களுக்கும், பெண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற K. கீதா அவர்களுக்கும், இரண்டாம்  பரிசு பெற்ற I.இக்னேஷ் அவர்களுக்கும், மூன்றாம் பரிசு பெற்ற S. விமலா அவர்களுக்கும் மேலும் 4-ம் பரிசு முதல் 8-ம் பரிசு வரை தலா இரு பிரிவிலும் பரிசு தொகைகள் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

 

marathon @ chennai (26) marathon @ chennai (25) marathon @ chennai (24) marathon @ chennai (23) marathon @ chennai (22) marathon @ chennai (21) marathon @ chennai (20) marathon @ chennai (19) marathon @ chennai (18) marathon @ chennai (17) marathon @ chennai (16) marathon @ chennai (15) marathon @ chennai (14) marathon @ chennai (13) marathon @ chennai (12) marathon @ chennai (11) marathon @ chennai (10) marathon @ chennai (9) marathon @ chennai (8) marathon @ chennai (7) marathon @ chennai (6) marathon @ chennai (5) marathon @ chennai (3) marathon @ chennai (2) marathon @ chennai (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *