Breaking News

குமரி மாவட்ட பாப்புலர்ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு பொதுக்கூட்டம்!

ஷரிஅத் சட்டங்களை துடைத்தெறிந்து விட்டு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் ஷரீஅத் பாதுகாப்பு பொது கூட்டம் 6.11.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு கோட்டாறு இளங்கடை பாவாகாசிம் (வலி) திடலில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் எம்.ஷேக் நூறுத்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.பைசல் அஹமது வரவேற்புரையாற்றினார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் ஏ.சுல்ஃபிக்கர் அலி, மாவட்ட பொது செயலாளர் எஸ்.ஹாஜா மைதீன், தெற்கு எல்லை போராட்ட தலைவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா, கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்ட் ஜமாத் தலைவர் ஹாஜி.பாவலர் பி.ஏ.சித்திக், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் எஸ்.ஜாஸிம், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் ஏ.மனூபா, ஆல் இந்தியா இமாம் கவுன்சில் குமரி மாவட்ட பொறுப்பாளர் ரபீக் பிர்தெளஸி மற்றும் பல்வேறு ஜமாத்துகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், சமுதாய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொது செயலாளர் எம். முகம்மது சேக் அன்சாரி, மாநில செயலாளர் ஏ.முகைதீன் அப்துல் காதர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணை தலைவர் எஸ்.எம்.ரஃபீக் அஹமது, நேஷ்னல் விமன்ஸ் ஃப்ரண்டின் தேசிய துணை தலைவர் பாத்திமா ஆலிமா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட மக்கள் மற்றும் ஊடக தொடர்பாளர் எஸ்.செய்யது இஸ்ஹாக் நன்றியுரையாற்றினார்.

 

Kumari (29) Kumari (28) Kumari (27) Kumari (26) Kumari (24) Kumari (23) Kumari (25) Kumari (22) Kumari (21) Kumari (20) Kumari (19) Kumari (18) Kumari (17) Kumari (16) Kumari (15) Kumari (14) Kumari (13) Kumari (12) Kumari (10) Kumari (9) Kumari (8) Kumari (7) Kumari (6) Kumari (5) Kumari (4) Kumari (3) Kumari (2) Kumari (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *