Breaking News

சேலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மபெரும் ஷரிஅத் பாதுகாப்பு பொதுக்கூட்டம்!

ஷரிஅத் சட்டங்களை துடைத்தெறிந்து விட்டு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து சேலம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் ஷரீஅத் பாதுகாப்பு பொது கூட்டம் 6.11.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.15 மணிக்கு சேலம் முஹம்மது புறா என்ற இடத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேலம் மாவட்ட தலைவர் என். சையது அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.முஹம்மது இப்ராஹிம் வரவேற்புரையாற்றினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேலம் மாவட்ட செயலாளர் அப்துல் சலாம், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அம்ஜத் பாஷா, மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஜர்ஜீஸ், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் கல்வி குழு பொறுப்பாளர் ஷம்சுதீன் இக்பால் தாவூதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இறுதியாக முஹம்மது ரபி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

 

20161106_203805-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *