Breaking News

இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்!

இந்தியாவின் மதசார்பற்ற தன்மைக்கு மாற்றமாக பொது சிவில் சட்டம் கொண்டுவர முயலும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) மற்றும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்(NWF) இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் 05.11.2016 அன்று மாலை 04.30 மணியளவில் இராமநாதபுரம் சந்தை திடலில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் ஜெ. முகம்மது ரசின் தலைமை தாங்கினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் A. முகைதீன் அப்துல் காதர், த.மா.கா கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் A. ரவிச்சந்திர ராமவன்னி, வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் வே. கணியமுதன், ஜமாத்துல் உலமா சபை மாவட்ட செயலாளர் மௌலவி அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத், SDPI மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் I. அஜ்மல் சரீப், ம.ம.க மாவட்ட செயலாளர் S ஜாகிர் உசேன், I U M L மாவட்ட தலைவர் வருசை முகம்மது, தியாகி இமானுவேல் பேரவை மாநில பொதுச்செயலாளர் பூ. சந்திர போசு, NWF மாவட்ட தலைவர் N. சுமையா நஸ்ரின், கீழக்கரை அனைத்து பெண்கள் மதரசா ஆசிரியை ஆபிதா டீச்சர் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்தும் அதை கொண்டுவர துடிக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் கோசங்கள் எழுப்பினர்.

இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் S. பசீர் அலி நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 700 பெண்கள் உட்பட 2000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

Ramnad (12) Ramnad (13) Ramnad (14) Ramnad (15) Ramnad (16) Ramnad (17) Ramnad (18) Ramnad (20) Ramnad (22) Ramnad (24) Ramnad (25) Ramnad (26) Ramnad (27) Ramnad (28)Ramnad (30) Ramnad (31)Ramnad (10)14938167_1188831757864330_5144496808287105438_n Ramnad (1)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *