Breaking News

நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற மாபெரும் ஷரிஅத் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்!

மத்திய பாஜக அரசே.! ஷரியத் சட்டத்தில் கை வைக்காதே.!! என்ற முழக்கத்தோடு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய மதச் சுதந்திரத்தை பறித்து பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் ஷரிஅத் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம் 05-11-2016 அன்று கடையநல்லூரில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்பாட்டத்திற்க்கு கடையநல்லூர் நகர தலைவர் சேக் பரீத் அவர்கள் தலைமை தாங்கினார்.

பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் இப்ராஹிம் உஸ்மானி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசின் 16 கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள் நகல் எரிக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டத்திற்க்கு பெருந்திரளாக ஜமாஅத்தார்கள், இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

Nellai west (4) Nellai west (3) Nellai west (2) Nellai west (1)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *